Posts

Showing posts from November, 2019

உலக நன்மைக்காகவும், இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை!

Image
உலக நன்மைக்காகவும், இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் & மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை! கொட்டும் மழையிலும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்!! மதுரை, நவ.30- உலக நன்மைக்காகவும்,   வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேறவும், நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திடவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் மற்றும் மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய பிரமாண்ட திருவிளக்கு பூஜை நவம்பர் 29&ந்தேதி   வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மிகவும் சிறப்பாக நடந்தது.   இந்த திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான தாய்மார்கள் ஆர்வத்துடன் திருவிளக்குகளுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன், இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்பட்டது. விழாவினை ராமக
Image
கதையல்ல... இது நிஜம் ... நம்புங்க பாஸ்!பொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி சம்பாதிக்கிறார் பிலாஸ்பூர் ,   நவ.30- வசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அரசாங்க ஊழியராகவே இருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் தன் நீண்ட நாள் கனவான விவசாயத்தைப் பின்பற்ற நினைத்தார். எனினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கள் அவருக்குப் பயமூட்ட போதுமானதாக இருந்தன.    வேளாண்மை கதையால் கவரப்பட்ட பேரன் வசந்த்தின் பேரன் சச்சின், கிராமத்திற்கு அடிக்கடி அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் அவரது தாத்தா கூறும் வேளாண்மை கதைகளால் கவரப்பட்டார். எனினும், இந்தியாவின் பல நடுத்தரக் குடும்பங்களைப் போலவே சச்சினின் பெற்றோரும் அவர் ஒரு பொறியாளர் அல்லது மருத்துவர் ஆக வேண்டும் என நினைத்தனர். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் சச்சினுக்கும் படிப்பது பிடித்திருந்த காரணத்தால் அவர் REC நாக்பூரில் (இப்போது VRCE என அழைக்கப்படும்) 2000 ஆம் அண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பொறியியல் பட்டம் பெற்று அவர

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் -பகுதி - 5

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள்- பகுதி - 5 உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானிய மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்... முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் இத்திட்டத்தின்கீழ் சிறு குறு உழவர்கள் பலன் பெறலாம். நேரடியாகப் பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுடைய சிறு, குறு உழவர்கள், குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் சிறு,குறு உழவர்களும் குடும்பத்தினரும் இணைய முடியும். இதற்காக அடையாள அட்டை வருவாய்த் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பங்கு பெறும் உழவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக்குத் தகுந்தவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் உறுப்பினரோ அவரைச் சார்ந்தவரோ இறக்க  நேரிடும்  பட்சத்தில் ஈமச்சடங்கு நிவாரணம் வழங்கப்படும். உழவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறும் இத்திட்டம் வருவாய்த் துறையின் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. தென்னை மரங்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்த

உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை!

Image
உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல்   - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை! மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது!! மதுரை, நவ.29 - உலக நன்மைக்காகவும், உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேற, நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திட குமுதம் பக்தி ஸ்பெஷல்¢மற்றும் மதுரை சத்யம் பயோ நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை இன்று (29 - ந்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடக்கிறது. இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க விரும்பும் தாய்மார்கள் திருவிளக்கு மட்டுமே கொண்டு வந்தால் போதும். பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன், உங்கள் இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்படும். இறை பணியில் உங்களை இணைத்துக்கொண்டு, இல்லங்கள் தோறும், உங்கள் உள்ளங்கள் தோறும் மகிழ்ச

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் பகுதி - 4

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானிய மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்... தமிழ்நாடு உழவர் நல நிதித் திட்டம் இத்திட்டம் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்தப் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக ஒரு வருடத்துக்கு ஒரு முறை அல்லது அதிக அளவு தங்களது விளைச்சலை விற்கும் அனைத்து உழவர்களும் இதில் சேரலாம். இத்திட்டத்தின் உறுப்பினர்.  எதிர்பாராத விபத்தின் காரணமாக மரணமடைந்தாலும் அல்லது பாம்புக்கடியின் காரணமாக மரணமடைதாலும் ரூ.1லட்சம்வரை குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும். விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமுற்றால் ரூ.75,000-ம் சிறிய அளவிளான ஊனத்திற்கு ரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முழு விவரங்களை அறிய அந்தந்த வட்டார ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் அல்லது மேற்பார்வையாளரை அணுகிப் பயன்பெறலாம். நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் - பகுதி -3

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானியம்  மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்... பிரதம மந்திரியின் உழவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட சிறு, குறு உழவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியத் தொகை அவரவர் வயதுக்கேற்ப மாறுபடும். மாதந்தோறும் 18 வயதுடைய ஒருவர் 55 ரூபாயும் அதே சமயம் 40 வயதுடைய ஒருவர் 200 ரூபாயும் இத்திட்டத்தில் செலுத்த வேண்டும். இடைப்பட்ட வயதுடையவர்கள் அவர்களின் வயதுக்கேற்ப பணம் செலுத்தும் தொகை மாறுபடும். 60 வயதுக்குப் பின்பு மாதந்தோறும் ரூ.3,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும். இத்திட்டத்தில் சேரத் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினிபட்டா அல்லது சிட்டா, ஆதார் எண் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், நகல் ஆகியவற்றை ஆவணங்களாக பயன்படுத்திப் பொது சேவை மையங்களில் இத்திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை விரிவாக்கப் பணியாளர்
Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் வேளாண்மையில் உழவுத் தொழிலை முன்னெடுக்கும் ஒருவர் மத்திய, மாநில அரசின் வேளாண் சார்ந்த குறிப்பாக உழவர் நலன் சார்ந்த நலத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமானது. அந்தத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டும். பாரதப் பிரதமரின் கிஸான் சம்மான் நிதி திட்டம் இத்திட்டத்தின்கீழ் உழவர்கள் சமூகப் பாதுகாப்புக்காக வருடந்தோறும் மூன்று தவணைகளாக ஆண்டொன்றுக்கு ரூ.6000 நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர பொதுச் சேவை மையங்களை அணுக வேண்டும். தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினி பட்டா அல்லது சிட்டா வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டையின் நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற அந்தந்தப் பகுதி வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்களை அணுகிப் பயன்பெறலாம். நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள்

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் பிரதம மந்திரிப் பயிர் காப்பீட்டுத் திட்டம் இத்திட்டத்தின் கீழ் பயிர்செய்யப்படும் பயிரைக் காப்பீடு செய்வது என்பது இன்றைய கால கட்டத்தில் அவசியமான ஒன்று. இயற்கை இடர்ப்பாடுகளுக்கு இழப்பீடு, சாகுபடி செய்யும் பயிரின் உற்பத்தி இழப்பிலிருந்து பாதுகாத்தல், வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை முதன்மை நோக்கங்கள். இத்திட்டத்தில் குறிப்பிட்ட பருவத்தில் சாகுபடிக்கு முன்னர் அல்லது சாகுபடி ஆரம்பிக்கும் சமயத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதியில் செய்யப்படும் பிரதான வேளாண் பயிர்களுக்கும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படும் பட்சத்தில் கிராம அளவில் மகசூல் இழப்புக் கணக்கெடுப்புக்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். அறுவடைக்குப் பின்பு ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இடர்ப்பாடுகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் இழப்பீடு கிடைக்கும். அந்தந்தப் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பொதுச் சேவை மையம், அரசு வங்கிகள் ஆகியவற்றின் மூல

இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் ஒரு ஆண்டு ஜெயில், ரூ.1 லட்சம் அபராதம்!

Image
மண்ணை மலடாக்கி, பயிர்களை நஞ்சாக்கும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் ஒரு ஆண்டு ஜெயில், ரூ.1 லட்சம் அபராதம்! உத்தரகாண்ட் முதல்வர் அதிரடி அறிவிப்பு!! டேராடூன் , நவ.16 - மண்ணை மலடாக்கி, பயிர்களை நாசம் செய்யும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் திரு.திரிவேந்திர சிங் ராவத் அதிரடியாக அறிவித்துள்ளார். அந்த காலங்களில் இயற்கையான உரங்களை பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல இயற்கை உரங்களை கைவிட்ட விவசாயிகள் பலர், செயற்கை உரங்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதனால் விளைநிலங்கள் மற்றும் மண் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநில அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பேசும்போது, விவசாய நிலங்களில் ரசாயன பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் புதிய விவசாய சட்டம் 2019-ஆம் ஆண்டு இயற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், முதற்கட்டமாக மாநிலத்தில் 8 பக

மிளகாய் விவசாயத்தில் சாதித்து வரும் விவசாயி மைக்கேல் பெருமிதம்!

Image
சக்தியை நம்பினோர் சத்தியமாய் கைவிடப்படார்... மிளகாய் விவசாயத்தில் சாதித்து வரும் விவசாயி மைக்கேல் பெருமிதம்! சாம்ராஜ்நகர், நவ.11 - சக்தி இயற்கை உரங்களை நம்பிக்கையோடு வாங்கி, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் மிளகாய் விவசாயத்தில் சாதித்து வருகிறார் கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஜோதி காவன்புரா கிராமத்தைச்சேர்ந்த விவசாயியான மைக்கேல். அவர் தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். என் பேரு மைக்கேல். சாம்ராஜ்நகர் மாவட்டம், ஜோதிகாவன்புரா கிராமத்துல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். கடந்த 5 வருடங்களா நான் சக்தி இயற்கை உரம் பயன்படுத்திக்கிட்டு இருக்கேன். இப்ப பாத்தீங்கன்னா நான் 2 ஏக்கர்ல மிளகாய் பயிரிட்டிருக்கேன். அதற்கு ஆரம்பத்தில் இருந்து சக்தி இயற்கை உரம்தான் பயன்படுத்திக்கிட்டு வர்றேன். முதல்ல வந்து பாத்தீங்கன்னா, நடவு பண்ணி 25 நாள் கழிச்சு,10 கிலோ கோல்டு ஜெல்லும், ஒருகிலோ பிளாக் கார்பனும் டிரெஞ்சிங் மூலமா கொடுத்தேன். மறுபடி வந்து பூ பூக்க ஆரம்பிச்ச பின்னால பாத்தீங்கன்னா, ஏக்கருக்கு 10 கிலோ சர்கா ஜெல்லியும், ஒரு கிலோ பிளாக் கார்பனும்   டிரிப் மூலமாவே கொடுக்க ஆரம்பிச்

சத்யம் தொழிற் குழுமம்’ எனும் விருட்சம்

Image
வேடிக்கை பார்ப்பவன் நிலாவை காட்டி சோறு ஊட்டுகிறான்... சாதிக்க நினைப்பவன் சந்திரனில் சறுக்கி விளையாடத் துடிக்கிறான்... 15 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய பயணம்... மதுரை நகர வீதிகளில் நடந்து செல்லும் இளைஞன். வேகமாய் கடந்து செல்லும் வாகனங்கள்... ஓட்டமும், நடையுமாய் பறந்து கொண்டிருக்கும் பாதசாரிகள்... எதை நோக்கி நாம் செல்லப்போகிறோம். நல்ல வேலை கிடைத்துவிட்டால் நாமும் சீக்கிரமே செட்டிலாகி விடலாம் என்கிற சராசரி இளைஞனுக்குரிய என்ற சிந்தனை ஓட்டங்கள் ஆழ் மனதுக்குள் துரத்திக்கொண்டிருக்க செந்தில்குமார் என்கிற அந்த இளைஞன் ஆயிரமாயிரம் கேள்விகளோடு எதிர்நடை போடுகிறார்... எதுவாக நீ நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிற கீதையின் வரிகள் சிந்தையில் பொறி கிளப்புகிறது. சின்னஞ்சிறு வயதில் கிராமத்து வயல்வெளிகளில் ஓடியாடியது நினைவுகளில் கரைபுரண்டோடுகிறது. பச்சை பசேலென பூத்துக்குலுங்கிய வயல்கள், இன்று வறண்ட பூமியாய் மாறிக்கிடப்பது மின்னலாய் வந்து போகிறது. மனம் ஒரு கணம் கனத்துப்போகிறது. நமக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான் தானே. செந்தில்குமாருக்குள்ளும் அந்த கிராமத்தானின் குரல் கேட்கத்தான் செய்தது.

ஒரு விவசாயி தொழிலதிபர் ஆகிறார்... மாற்றங்களை நோக்கி சத்யம் பயோ!

Image
ஒரு விவசாயி தொழிலதிபர் ஆகிறார்... மாற்றங்களை நோக்கி சத்யம் பயோ! சோழவந்தானில் F3 ஆர்கானிக் மார்க்கெட் உதயம்!! மதுரை, நவ.02 - சத்யம் பயோ இயற்கை உரங்களின் வாடிக்கையாளராக இருந்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாயி கே.வி.முருகேசன் F 3 ஆர்கானிக் மார்க்கெட் வாயிலாக முன்னேற்றத்தின் படிகளில் ஏறத் துவங்கி உள்ளார். மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் விவசாயி கே.வி.முருகேசன். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவரான இவர் தென்னை, நெல், வாழை என முழுமையாகத் தன்னை விவசாயப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இரசாயன உரங்களை புறந்தள்ளி விட்டு சத்யம் பயோவின் சக்தி இயற்கை உரங்களின் வாடிக்கையாளரானார். தொடர்ந்து சக்தி இயற்கை உரங்கள் வாயிலாக கிடைத்த மாற்றங்களின் பலனாகவும், அமோகமான மகசூலின் விளைவாகவும் சக்தி இயற்கை உரங்களால் தான் பெற்ற பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு சோழவந்தான், நாடார் தெருவில் தனது வேல்நாடார் டிரேடர்ஸின் அங்கமாக சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட்டையும்   தற்போது நடத்தி வருகிறார். F 3 ஆர்கான