சத்யம் தொழிற் குழுமம்’ எனும் விருட்சம்






வேடிக்கை பார்ப்பவன் நிலாவை காட்டி சோறு ஊட்டுகிறான்... சாதிக்க நினைப்பவன் சந்திரனில் சறுக்கி விளையாடத் துடிக்கிறான்...
15 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய பயணம்... மதுரை நகர வீதிகளில் நடந்து செல்லும் இளைஞன். வேகமாய் கடந்து செல்லும் வாகனங்கள்... ஓட்டமும், நடையுமாய் பறந்து கொண்டிருக்கும் பாதசாரிகள்... எதை நோக்கி நாம் செல்லப்போகிறோம். நல்ல வேலை கிடைத்துவிட்டால் நாமும் சீக்கிரமே செட்டிலாகி விடலாம் என்கிற சராசரி இளைஞனுக்குரிய என்ற சிந்தனை ஓட்டங்கள் ஆழ் மனதுக்குள் துரத்திக்கொண்டிருக்க செந்தில்குமார் என்கிற அந்த இளைஞன் ஆயிரமாயிரம் கேள்விகளோடு எதிர்நடை போடுகிறார்...
எதுவாக நீ நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிற கீதையின் வரிகள் சிந்தையில் பொறி கிளப்புகிறது. சின்னஞ்சிறு வயதில் கிராமத்து வயல்வெளிகளில் ஓடியாடியது நினைவுகளில் கரைபுரண்டோடுகிறது. பச்சை பசேலென பூத்துக்குலுங்கிய வயல்கள், இன்று வறண்ட பூமியாய் மாறிக்கிடப்பது மின்னலாய் வந்து போகிறது. மனம் ஒரு கணம் கனத்துப்போகிறது. நமக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான் தானே. செந்தில்குமாருக்குள்ளும் அந்த கிராமத்தானின் குரல் கேட்கத்தான் செய்தது... ‘எனக்காக, நீ என்ன செய்யப்போகிறாய் மகனே?’& இது பூமித்தாயின் வேதனைக்குரல்.

ஏதாவது செய்ய வேண்டும்... என்ன செய்யலாம் என்ற கேள்வியின் ஊடே, ‘மாத்தி யோசி’ என்கிற மந்திரக்குரல். யோசித்தார்... கெமிக்கல் கலங்களாய் மாறிப்போன, நிலங்களை, மீண்டும் விளைநிலங்களாய் மாற்ற இயற்கையை யாசித்தார். கடல் வழித்தாவரங்கள் மூலம் இயற்கை உரங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டினார். அதன் வழிமுறைகளை அறிந்து கொள்ள கடல் வாழிடங்களுக்கே தேடிச்சென்றார். அனேக அதிசயங்களை கொண்டிருக்கும் கடல்தான் நமக்கான விடை என்பதை புரிந்து கொண்டார். செயலில் இறங்கினார்.
அங்கேயும் வந்தது சிக்கல். மூலதனம் இல்லாத தொழில் எது? தேர்ந்தெடுத்திருப்பதோ புதிய துறை. கையில் இருப்பதோ சிறு தொகை. கொடுத்து உதவுவதற்கும் ஆளில்லா சூழல்.
மனம் தளரவில்லை செந்தில்குமார். இருக்கிற தொகையில் கொறஞ்ச பட்ஜெட்டில் இறங்கி பாத்துடலாம் என துணிந்தார். தொழிலில்¢ நேர்மையும், உண்மையும் வாழ்வின் துணை என்ற நம்பிக்கையுடன் 2004&ல் ‘சத்யம் பயோ’ நிறுவனத்தை தொடங்கினார்.


வெறும் நான்கு பேருடன் துவங்கப்பட்ட நிறுவனம். உற்பத்தி செய்த பொருட்களை ஊர், ஊராக கொண்டு செல்ல வேண்டும். விவசாயிகளை சந்திக்க வேண்டும். புதுசுதானே, பெருசா என்ன இருந்துட போகுது... என்ற சந்தேக கண்ணோடு கேள்வியெழுப்பும் விவசாயிகளுக்கு புரியும்படி எடுத்துச்சொல்ல வேண்டும். அவர்களின் சந்தேகம் தீர்ந்து பலன் கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். தானே களமிறங்கினார் செந்தில்குமார்.

முதல் முறையாக ஒரு நகரத்து இளைஞனின் பயணம் கிராமங்களை நோக்கி தொடங்கியது. பெரிதாக வசதி, வாய்ப்புகள் இல்லாத கால கட்டம். அருகாமையில் உள்ள ஊர்களுக்கு டூவீலர் கைகொடுத்தது. தொலைதூர ஊர்களுக்கு அரசு பஸ்கள் கைகொடுத்தது. இரவு, பகல் எந்த நேரம் கூப்பிட்டாலும் போகத் தயாராக இருக்க வேண்டும். பசியின்றி பல பகல்களும், தூக்கமின்றி ஏராளமான இரவுகளும் கடந்தோடியது. பஸ் தடம் பதிக்காத கிராமங்களிலும் செந்தில் குமாரின் பாதங்கள் தடம் பதித்தது. இடைவிடாமல் உழைத்தார். உழைப்புக்கு பலன் இல்லாமலா போகும்?
சத்யம் பயோ தயாரிப்பு உரங்கள் மீதான நம்பிக்கை விவசாயிகளிடையே கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்தது. இது போதும் என்று நின்று விடவில்லை நம் நிறுவனர். மதுரையை தலைமையிடமாக கொண்டாலும் மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் கிளைகளை விரிவுபடுத்தினார். விவசாயத்தின் அனைத்து எல்லைகளுக்கும் சென்று விட வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்தது. இயற்கை உரங்களின் தயாரிப்புகளில் புதுப்புது உத்திகளை கையாண்டார். எல்லாவித நிலங்களுக்கும், எல்லாவிதமான பயிர்களுக்கும் ஏற்ற இயற்கை உரங்களை முன்னெடுத்தார். சத்யம் பயோவின் பெயர், பெயர் மெல்ல மெல்ல வெளிமாநிலங்களுக்கும் பரவியது. ஆந்திரா, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், டெல்லி போன்ற அண்டை மாநிலங்களும் சத்யம் பயோ தயாரிப்புகளுக்கு சிவப்பு கம்பளம் விரித்தன. சீனா, மலேசியா போன்ற நாடுகளில் நடந்த வேளாண் கண்காட்சிகளிலும் சத்யம் பயோவின் தயாரிப்புகள் இடம்பெற, ‘அட, இது புதுசா இருக்கே...’ என அங்கிருந்தும் விசாரிப்புகள் வரத்தொடங்கின.

நான்கு பேருடன் தொடங்கப்பட்ட சத்யம் பயோ, தற்போது 15 ஆண்டுகளில், சத்யம் கிசான் கேர், தயாநிஸ் கொலாய்ட்ஸ், சத்யம் நெக்ஸ்ட் ஜெனரேஷன், ஐஏஆர்எஸ் கல்லூரி, ஷிணிணிஞி அறக்கட்டளை என பல்வேறு நிறுவனங்களாய்... 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 40க்கும் மேற்பட்ட முகவர்கள், லட்சக்கணக்கணக்கான விவசாயிகள்... என விழுதுகள் பரப்பி சத்யம் தொழிற் குழுமமாய்... பெரும் விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது. இது ஒரு தனி மனிதனின் உழைப்புக்கு இயற்கை கொடுத்த மிகப்பெரிய கொடை என்றால் மிகையல்ல!

Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!