Posts

Showing posts from January, 2020

தமிழக அரசின் கனவுத்திட்டத்திற்கு தோள்கொடுக்கும் மதுரை சத்யம் குழுமம் அதிபர் வெ.செந்தில்குமார்!

Image
கடலோர கிராமிய மீனவப்பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் தமிழக அரசின் கனவுத்திட்டத்திற்கு தோள்கொடுக்கும் மதுரை சத்யம் குழுமம் அதிபர் வெ.செந்தில்குமார்! சென்னை, பிப்.02 - சென்னையில் கடந்த ஜனவரி 30, 31 தேதிகளில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கடல்பாசி கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் தமிழ்நாடு அரசின் கனவுத்திட்டமான கடலோர கிராமிய மீனவப் பெண்களின் கடல்பாசி சேகரிப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மதுரை சத்யம் தொழிற்குழுமத்திற்கு வழங்கப்பட்டது.  இதன் மூலம் கடலோர கிராமிய மீனவப்பெண்களின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலை மேம்பட நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 15 ண்டுகளுக்கு மேலாக மதுரை சத்யம் தொழிற்குழுமம் கடல்பாசி இயற்கை உரம் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம்.

Image
வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம். சீனித் துளசி சாகுபடி! உ லகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல நோய்களும் பெருகிக் கொண்டே உள்ளன. இவற்றுக்கான தீர்வுக்காக ஆங்கில மருந்து மாத்திரைகளைச் சாப்பிடும் போது பக்க விளைவுகள் உண்டாகின்றன. அதனால், மக்களின் பார்வை இப்போது மூலிகை மருத்துவத்தின் பக்கம் திரும்பியுள்ளது. மூலிகைகள் பட்டியலில் முக்கியமானது துளசி. அந்த இனத்தைச் சார்ந்தது இனிப்புச் சுவையுள்ள சீனித் துளசி. இதை ஆங்கிலத்தில் ஸ்டீவியா ரியோடியானா என அழைப்பார்கள். சீனித் துளசியின் தாயகம் தென்னமெரிக்கா. இது பராகுவேயில் மிகுதியாக உள்ளது. சீனித் துளசி இலையிலுள்ள ஸ்டீவியோசடு 3-10x, ரெபடையோசடு 13x ஆகிய வேதிப் பொருள்கள் தான் இதன் இனிப்புக்குக் காரணம். ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனித் துளசி கூடுதலாகப் பயிராகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் ஏற்றுமதியில் சீனம் முதலிடம் வகிக்கிறது. சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும். கார அமிலத் தன்மை 6

ஒருங்கிணைந்த பண்ணையம் -ஒரு பார்வை

Image
  ஒருங்கிணைந்த பண்ணையம் ஒரு பார்வை  வி வசாயிகளின் முன்னேற்றத்திற்காக, தமிழக வேளாண்மைத்துறை சிறப்பான பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்களைத் தங்களின் மாநிலங்களிலும் செயல்படுத்தும் நோக்கத்தில், பல்வேறு மாநில அரசு அதிகாரிகள் இங்கு வந்து இவற்றைப் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து செல்கின்றனர். அந்த வகையில் தற்போது விவசாயிகளின் முன்னேற்றத்தைக் நோக்கமாகக் கொண்டு, ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் மாதிரித் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்துத் தமிழக வேளாண்மைத் துறையின் இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். பண்ணையின் உற்பத்தித்  திறனை மேம்படுத்தி நீடித்த, நிலையான வளத்தைப் பெறும் வகையில், தட்பவெப்ப  மண்டலங்களுக்கு ஏற்ற வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறைகள் செயல்படுத்தப்படும். இவற்றுக்கான தொழில் நுட்ப ஆலோசனைகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையங்கள் மூலம்

சத்யம் தொழிற்குழுமத்தின் வேளாண் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

Image
சத்யம் தொழிற்குழுமத்தின் வேளாண் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்! சிவானந்தா சேவாஸ்ரமம் சுவாமிகள் ஸ்வரூபானந்தா ஆசியுரை வழங்கினார்- கல்லூரி தாளாளர் திருமதி. வி.சத்யப்ரியா செந்தில்குமார்  பரிசுகள் வழங்கினார்!! மதுரை, ஜன.11 - சத்யம் தொழிற்குழுமத்தின் ஒரு அங்கமான வேளாண் அறிவியல்&ஆராய்ச்சி (ஐ.ஏ.ஆர்.எஸ்.) கல்லூரியில் உழவர் பெருமக்களை போற்றும் வகையில் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன. உலகெங்கிலும் பரவி வாழும் ஒப்பற்ற தமிழர்களின் தனிப்பெருந்திருவிழா என்பதால் அதனை சிறப்பிக்கின்ற வகையில் கல்லூரியின் பேராசிரியப்பெருமக்களும், மாணவ, மாணவியரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தும், சேலை உடுத்தியும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் பங்கேற்றனர். பொங்கல் திருநாளுடன், சுவாமி விவேகானந்தரின் 157&வது பிறந்த நாள் விழாவும், கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் பொன் (50&ம் ஆண்டு) விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பாத்திமா கல்லூரியின் முன்னாள் துறை தலைவர் டாக்டர் திருமதி. கீத

விவசாயத்தை வளமாக்கும் நுண்ணீர்ப் பாசனம்!

Image
விவசாயத்தை வளமாக்கும் நுண்ணீர்ப் பாசனம் ! நா மக்கல் மாவட்டத்தின் மொத்தப் பரப்பு 3,36,719 எக்டர். மாவட்டத்தின் சராசரி மழையளவு 716.54 மி.மீ. கடல் மட்டத்தில் இருந்து 300-500 மீட்டர் உயரத்தில் நிலப்பரப்பு அமைந்துள்ளது. மொத்தம் 8 வட்டங்கள், 15 ஒன்றியங்கள் உள்ளன. புகழ் பெற்ற கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சமவெளிப் பகுதிகளில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. நெல், சோளம், மக்காசோளம், பாசிப்பயறு, உளுந்து, தட்டைப்பயறு, நிலக்கடலை, ஆமணக்கு, எள், பருத்தி, கரும்பு, தக்காளி, கத்தரி, வெண்டை, வெங்காயம், மஞ்சள், மரவள்ளி, வாழை, வெற்றிலை ஆகியன முக்கியப் பயிர்களாகும். கொல்லிமலையில் நெல், இராகி, மிளகு, காபி, அன்னாசி, பலா ஆகியன விளைகின்றன. இங்கு விளையும் மிளகு உலகத்தரம் வாய்ந்தது.  இந்த மாவட்டத்தின் முக்கிய வாய்க்கால் பாசன ஆதாரமாக காவிரியாறு உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து பெறப்படும் காவிரி நீர், நீரேற்றுப் பாசனம் மற்றும் இராஜா வாய்க்கால், குமாரபாளையம் வாய்க்கால், பொய்யேரி வாய்க்கால், மோகனூர் வாய்க்கால் மூலம், 6,538 எக்டர் நிலத்துக்குப் பாசன