உழவர்களுக்கான உன்னத திட்டங்கள்
உழவர்களுக்கான
உன்னத திட்டங்கள்
பிரதம மந்திரிப் பயிர் காப்பீட்டுத்
திட்டம்
இத்திட்டத்தின் கீழ் பயிர்செய்யப்படும் பயிரைக் காப்பீடு செய்வது என்பது இன்றைய
கால கட்டத்தில் அவசியமான ஒன்று. இயற்கை இடர்ப்பாடுகளுக்கு இழப்பீடு, சாகுபடி செய்யும்
பயிரின் உற்பத்தி இழப்பிலிருந்து பாதுகாத்தல், வேளாண் வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவை
முதன்மை நோக்கங்கள். இத்திட்டத்தில் குறிப்பிட்ட பருவத்தில் சாகுபடிக்கு முன்னர் அல்லது
சாகுபடி ஆரம்பிக்கும் சமயத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தின் கீழ் அந்தந்தப் பகுதியில் செய்யப்படும் பிரதான வேளாண் பயிர்களுக்கும்
தோட்டக்கலைப் பயிர்களுக்கும் காப்பீடு செய்யப்படுகிறது. இயற்கை இடர்ப்பாடுகள் ஏற்படும்
பட்சத்தில் கிராம அளவில் மகசூல் இழப்புக் கணக்கெடுப்புக்கு இழப்பீடு கிடைக்க வழிவகை
செய்யப்படும். அறுவடைக்குப் பின்பு ஏற்படும் இழப்பு, புயல், ஆலங்கட்டி மழை, மண் சரிவு,
வெள்ளம் போன்ற இடர்ப்பாடுகளுக்கும் இத்திட்டத்தின் மூலம் இழப்பீடு கிடைக்கும்.
அந்தந்தப் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, பொதுச் சேவை மையம்,
அரசு வங்கிகள் ஆகியவற்றின் மூலம் பயிர்க் காப்பீடு செய்துகொள்ள முடியும். பட்டா, அடங்கல்,
சிட்டா, ஆதார் ஆகிய ஆவணங்கள், உறுதிமொழிப் படிவம், முன்மொழிப்படிவம் ஆகிய படிவங்கள்
பயிர்க் காப்பீடு செய்யும்போது அளிக்க வேண்டியவை.
நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...
பாமர விவசாயிகளுக்கு எளிதாக புரிகின்ற மாதிரி எளிய தமிழ் வடிவத்தில் மத்திய, மாநில அரசுகளின் விவசாயத் திட்டங்களையும், அதனை பயன்படுத்திக்கொள்ள எங்கு? யாரை சந்திக்க வேண்டும்? என்னென்ன மாதிரியான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்கிற தகவல்களை சுருக்கமாக அளித்திருப்பது மிகச்சிறப்பு. உழவர்களை வாழ வைக்கும் இது போன்ற முயற்சிகளை தொடருங்கள் நண்பரே!
ReplyDelete