உழவர்களுக்கான
உன்னத திட்டங்கள்
வேளாண்மையில் உழவுத் தொழிலை முன்னெடுக்கும் ஒருவர் மத்திய, மாநில அரசின் வேளாண்
சார்ந்த குறிப்பாக உழவர் நலன் சார்ந்த நலத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமானது.
அந்தத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டும்.
பாரதப் பிரதமரின் கிஸான்
சம்மான் நிதி திட்டம்
இத்திட்டத்தின்கீழ் உழவர்கள் சமூகப் பாதுகாப்புக்காக வருடந்தோறும் மூன்று தவணைகளாக
ஆண்டொன்றுக்கு ரூ.6000 நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர
பொதுச் சேவை மையங்களை அணுக வேண்டும். தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினி பட்டா அல்லது
சிட்டா வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டையின் நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. இது
தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற அந்தந்தப் பகுதி வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்களை
அணுகிப் பயன்பெறலாம்.
நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...
Comments
Post a Comment