உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் - பகுதி -3


உழவர்களுக்கான
உன்னத திட்டங்கள்

உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானியம்  மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்...

பிரதம மந்திரியின் உழவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட சிறு, குறு உழவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியத் தொகை அவரவர் வயதுக்கேற்ப மாறுபடும். மாதந்தோறும் 18 வயதுடைய ஒருவர் 55 ரூபாயும் அதே சமயம் 40 வயதுடைய ஒருவர் 200 ரூபாயும் இத்திட்டத்தில் செலுத்த வேண்டும்.

இடைப்பட்ட வயதுடையவர்கள் அவர்களின் வயதுக்கேற்ப பணம் செலுத்தும் தொகை மாறுபடும். 60 வயதுக்குப் பின்பு மாதந்தோறும் ரூ.3,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும். இத்திட்டத்தில் சேரத் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினிபட்டா அல்லது சிட்டா, ஆதார் எண் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், நகல் ஆகியவற்றை ஆவணங்களாக பயன்படுத்திப் பொது சேவை மையங்களில் இத்திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை விரிவாக்கப் பணியாளர்களை அணுகிப் பயன்பெறலாம்.

நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...


Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!