உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் பகுதி - 4
உழவர்களுக்கான
உன்னத திட்டங்கள்
உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானிய மற்றும் சலுகை திட்டங்களையும்,
குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்...
தமிழ்நாடு உழவர் நல நிதித்
திட்டம்
இத்திட்டம் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்தப்
பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக ஒரு வருடத்துக்கு ஒரு முறை அல்லது அதிக
அளவு தங்களது விளைச்சலை விற்கும் அனைத்து உழவர்களும் இதில் சேரலாம். இத்திட்டத்தின்
உறுப்பினர். எதிர்பாராத விபத்தின் காரணமாக மரணமடைந்தாலும் அல்லது பாம்புக்கடியின் காரணமாக மரணமடைதாலும்
ரூ.1லட்சம்வரை குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும். விபத்தின் காரணமாக நிரந்தர
ஊனமுற்றால் ரூ.75,000-ம் சிறிய அளவிளான ஊனத்திற்கு ரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முழு விவரங்களை அறிய அந்தந்த வட்டார ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர்
அல்லது மேற்பார்வையாளரை அணுகிப் பயன்பெறலாம்.
நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...
Comments
Post a Comment