உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் -பகுதி - 5
உழவர்களுக்கான
உன்னத திட்டங்கள்- பகுதி - 5
உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானிய மற்றும் சலுகை திட்டங்களையும்,
குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்...
முதல்வரின் உழவர் பாதுகாப்புத்
திட்டம்
இத்திட்டத்தின்கீழ் சிறு குறு உழவர்கள் பலன் பெறலாம். நேரடியாகப் பயிர் செய்யும்
18 வயது முதல் 65 வயதுடைய சிறு, குறு உழவர்கள், குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள்
அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் சிறு,குறு உழவர்களும் குடும்பத்தினரும்
இணைய முடியும். இதற்காக அடையாள அட்டை வருவாய்த் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பங்கு பெறும் உழவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக்குத் தகுந்தவாறு
கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் உறுப்பினரோ அவரைச் சார்ந்தவரோ இறக்க நேரிடும் பட்சத்தில் ஈமச்சடங்கு நிவாரணம் வழங்கப்படும். உழவர்கள், விவசாயத் தொழிலாளர்கள்
ஆகியோர் பயன்பெறும் இத்திட்டம் வருவாய்த் துறையின் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது.
தென்னை மரங்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களாலும், நில அதிர்ச்சி,
ஆழிப்பேரலை, பூச்சி தாக்குதல் போன்ற தாக்குதல்களாலும் மரங்கள் பாதிக்கப்பட்டால் இழப்பீட்டுத்
தொகை காப்பீட்டு நிறுவனம் மூலம் வழங்கப்படும்.
Comments
Post a Comment