
இயற்கைப் பாதைக்குத் திரும்பும் ஆந்திரம்! ஆ ந்திர முதல்வர் “2024 இல் தமது மாநிலம் முழுமையான இயற்கை மாநிலமாகி விடும். இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஒழிக்கப்பட்டு விடும்'' என, தாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த, விவசாய இடுபொருள்களின் செலவைக் குறைத்தல், உணவு நஞ்சாதலைத் தடுத்தல், மண்வளம் கூட்டல் போன்றவற்றை 2015 லேயே தொடங்கி, நஞ்சற்ற விவசாயத்தின் முன்னோடியானது ஆந்திரம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பு, இந்த ஆண்டில் மண்டலத்துக்கு ஒரு பஞ்சாயத்து என, ஐந்து இலட்சம் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர் என்றும், 2024 இல் திட்டம் முழுமை பெறும் என்றும் கூறுகிறது. “16,500 கோடி ரூபாய் இதற்கான மூலாதாரமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி அனைத்து நில உடைமையாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும்'' என்கிறார், இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.விஜயகுமார். விவசாயத் துறையினர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவுவதே கடமை. உருவாக்கப்படும் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் திட்டத்தை முன் நட...