இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் ஒரு ஆண்டு ஜெயில், ரூ.1 லட்சம் அபராதம்!
மண்ணை மலடாக்கி, பயிர்களை
நஞ்சாக்கும்
இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால்ஒரு ஆண்டு ஜெயில், ரூ.1 லட்சம்
அபராதம்!உத்தரகாண்ட் முதல்வர் அதிரடி
அறிவிப்பு!!
டேராடூன், நவ.16-
மண்ணை மலடாக்கி, பயிர்களை நாசம் செய்யும் இரசாயன உரங்களைப் பயன்படுத்தினால் ஒரு
ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உத்தரகாண்ட்
முதல்வர் திரு.திரிவேந்திர சிங் ராவத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அந்த காலங்களில் இயற்கையான உரங்களை பயன்படுத்தி, ஆரோக்கியமான வாழ்வை மக்கள் வாழ்ந்து
வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல, செல்ல இயற்கை உரங்களை கைவிட்ட விவசாயிகள் பலர், செயற்கை
உரங்களை பயன்படுத்தத் தொடங்கினர்.
இதனால் விளைநிலங்கள் மற்றும் மண் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில்,
உத்தரகாண்ட் மாநில அரசு அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
அம்மாநில முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் பேசும்போது, விவசாய நிலங்களில் ரசாயன
பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் புதிய விவசாய சட்டம் 2019-ஆம்
ஆண்டு இயற்றப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், முதற்கட்டமாக மாநிலத்தில் 8 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பகுதிகளில்
செயற்கை உரங்கள் தடை செய்யப்படும் என்றும், அந்த விதியை மீறி செயற்கை உரங்களை பயன்படுத்தினால்,
1 லட்சம் ரூபாய் அபாரதம், ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் முதலமைச்சர்
தெரிவித்துள்ளார். இச்சட்டம் வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் இயற்றப்படும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் வெள்ளைக்காரர்கள். நாட்டை விட்டு அவர்கள் போய் 70 ஆண்டுகளாகி விட்ட போதிலும் கூட அவர்கள் விட்டுச்சென்ற கோட், சூட் கலாச்சாரம் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது.
ReplyDeleteஇப்படித்தான் நாட்டை விட்டு வெளியேறினாலும், நம்மை வாழ விடக்கூடாது என்றநோக்கத்தோடு நாம் சாப்பிடும் உணவில் கைவைத்தார்கள். பயிர்களை நஞ்சாக்கி தலை, தலைமுறைக்கும் நம்மை வாழவிடக்கூடாது என்பதற்காகவே செயற்கை இராசயன உரங்களையும், கடும் விசம் கொண்ட பூச்சிக்கொல்லிகளையும் நமக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
இரசாயன உரங்களைப்பயன்படுத்திய மேற்கத்திய நாடுகள் அனைத்தும் அதை கைவிட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே இயற்கை உரங்களுக்கு மாறி விட்ட போதிலும் நம் அடிமைப் புத்தியால் நாம் மட்டும் இன்னமும் இரசாயன உரங்களை பயன்படுத்தி, மண்ணையும், பயிர்களையும் தொடர்ந்து நாசப்படுத்துவதுடன், நம் சந்ததிகளையும் நோயாளி ஆக்கி கொண்டிருக்கிறோம்.
இரசாயன உரங்களை ஒழிக்க அரசாங்கமே இப்படி கடுமையான தண்டனையோடு, நடவடிக்கையில் இறங்கினாலன்றி, நாம் மாறவே முடியாது.
இயற்கை உரங்களுக்கும், இயற்கை விவசாயத்துக்கும் மாற வேண்டிய தருணம் இது என்பதை இப்போதாவது உணர்ந்து உடனடியாக மாறிக்கொள்வோம்.