உலக நன்மைக்காகவும், இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை!
உலக நன்மைக்காகவும், இல்லங்களில் சந்தோசம் பெருகவும்
குமுதம்
பக்தி ஸ்பெஷல் & மதுரை சத்யம் பயோ நிறுவனம்
இணைந்து
நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை!
கொட்டும் மழையிலும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார்
கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்!!
மதுரை, நவ.30-
உலக நன்மைக்காகவும், வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேறவும்,
நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திடவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் மற்றும் மதுரை சத்யம்
பயோ நிறுவனம் இணைந்து நடத்திய பிரமாண்ட திருவிளக்கு பூஜை நவம்பர் 29&ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி
வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார்
கோயிலில் மிகவும் சிறப்பாக நடந்தது.
இந்த திருவிளக்கு
பூஜையில் நூற்றுக்கணக்கான தாய்மார்கள் ஆர்வத்துடன் திருவிளக்குகளுடன் பங்கேற்றனர்.
அவர்களுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன்,
இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்பட்டது.
விழாவினை
ராமகிருஷ்ண மடம் தலைவர் சுவாமி கமலாத்மனந்தர் தலைமையேற்று துவக்கி வைத்தார், காவல்
துறை உதவி ஆணையர் கவிஞர் மணிவண்ணன், குமுதம் நிறுவனத்தின் பொது மேலாளர் உமா சேகர், விற்பனைப்பிரிவு மேலாளர் செல்வராஜ், மதுரை சத்யம்பயோ
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார், இந்து அறநிலையத்துறை சிவகங்கை மண்டல
இணை ஆணையர் தனபால், கோயில் கண்காணிவ்பாளர் பால சரவணன், ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம்
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவை பட்டிமன்ற நடுவர் ஆசிரியர்
பொன்.சந்திரசேகரன் தொகுத்து வழங்கினார்.
திருவிளக்கு
பூஜையை விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சீதாராமன் துணைவியார் திருமதி பத்மலட்சுமி முன்னின்று
நடத்தினார். திருவிளக்கு பூஜை துவங்குவதற்கு முன்பாக மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கணக்கான இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வத்துடன்
இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். மந்திர பாராயணங்கள், திருவிளக்கு மந்திரங்கள்,
பக்தி பாடல்களுடன் சுமார் இரண்டரை மணிநேரம் நிகழ்ந்த இந்த விழாவால் கோயில் வளாகம் முழுக்க
பரவச உணர்வு பரவி நின்றது.
விழாவின்
ஸ்பான்சரான மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமாருக்கு
சுவாமி கமலாத்மானந்தர் பொன்னாடை அணிவித்து ஆசி வழங்கினார்.
Comments
Post a Comment