ஒரு விவசாயி தொழிலதிபர் ஆகிறார்... மாற்றங்களை நோக்கி சத்யம் பயோ!


ஒரு விவசாயி தொழிலதிபர் ஆகிறார்...
மாற்றங்களை நோக்கி சத்யம் பயோ!

சோழவந்தானில் F3 ஆர்கானிக் மார்க்கெட் உதயம்!!

மதுரை, நவ.02-
சத்யம் பயோ இயற்கை உரங்களின் வாடிக்கையாளராக இருந்து வந்த மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாயி கே.வி.முருகேசன் F3 ஆர்கானிக் மார்க்கெட் வாயிலாக முன்னேற்றத்தின் படிகளில் ஏறத் துவங்கி உள்ளார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் விவசாயி கே.வி.முருகேசன். பாரம்பரிய விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவரான இவர் தென்னை, நெல், வாழை என முழுமையாகத் தன்னை விவசாயப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இரசாயன உரங்களை புறந்தள்ளி விட்டு சத்யம் பயோவின் சக்தி இயற்கை உரங்களின் வாடிக்கையாளரானார். தொடர்ந்து சக்தி இயற்கை உரங்கள் வாயிலாக கிடைத்த மாற்றங்களின் பலனாகவும், அமோகமான மகசூலின் விளைவாகவும் சக்தி இயற்கை உரங்களால் தான் பெற்ற பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு சோழவந்தான், நாடார் தெருவில் தனது வேல்நாடார் டிரேடர்ஸின் அங்கமாக சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட்டையும்  தற்போது நடத்தி வருகிறார்.



F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய கிளை துவக்கவிழா சோழவந்தான்,  NH 46, நாடார் தெருவில் அமைந்துள்ள வேல்நாடார் டிரேடர்ஸில் கோலாகலமாக நடந்தது. தொடக்க விழாவுக்கு மதுரை சத்யம் பயோவின் பொதுமேலாளர் ஞானசேகர் தலைமை வகிக்க, பிரபல தொழிலதிபரும், மதுரை சொக்கிகுளம் ஸ்வாசிகா விநாயகா பர்னிச்சர் அதிபருமான சிவசங்கர் புதிய கிளையைத் திறந்து வைத்தார்.

விழாவில் சத்யம் பயோ வணிகத்தலைவர் சக்திவேல், மண்டல விற்பனை மேலாளர் அருண்குமார், கிளஸ்டர் மேலாளர் அருண்ரத்னம்,  செய்தி, மக்கள் தொடர்பாளர் தியாகராஜன், விற்பனை அலுவலர் எல்.ஏ.ராஜா மற்றும் அப்பகுதி மக்களும், விவசாய பெருமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.



சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸியான கே.வி.முருகேசன் நம்மிடம் கூறும்போது, பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகிறோம். தென்னை, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறோம். இராசயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், ஏன் நாம் இயற்கை உரங்களை பயன்படுத்தக்கூடாது எனத் தோன்றியது. 5 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்களை வாங்கி பயன்படுத்த தொடங்கினேன். 

இயற்கை உரங்களை பயன்படுத்த தொடங்கியதில் இருந்து நல்ல மாற்றங்கள் கிடைப்பதை உணரத்தொடங்கினேன். விளைச்சலை பொறுத்தமட்டில் நல்ல பலன் கிடைப்பதையும் உணர்ந்தேன். இதனால் முழுமையாக இயற்கை உரங்களுக்கு மாறினேன்.
எனது விவசாய முறைகளை கண்டு, ‘என்ன உரம் போடற..’ என இப்பகுதியில் மற்ற விவசாயிகளும் ஆர்வமாக விசாரிக்கத் தொடங்கினர்.  நமக்கான பலன் நம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சத்யம் பயோவின் F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் பிரான்சைஸி ஆகியிருக்கிறேன். சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி இப்பகுதி விவசாயிகள் முழுமையாகப் பலன் பெறுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்கிறார் கே.வி.முருகேசன்.


மாற்றங்கள் ஒன்றே மாறாதது. அதனை F3 ஆர்கானிக் மார்க்கெட் மூலம் முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக மாற்ற முயல்கிறது மதுரை சத்யம் பயோ. கே.வி.முருகேசன் போன்று இன்னும் எண்ணற்ற விவசாயிகள் F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் பலன்களை முழுமையாக பெறுவார்கள் என்று நம்புவோம்.





Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!