உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை!


உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும்
குமுதம் பக்தி ஸ்பெஷல்  - மதுரை சத்யம் பயோ நிறுவனம்
இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை!
மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில்
இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது!!


மதுரை, நவ.29-
உலக நன்மைக்காகவும், உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேற, நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திட குமுதம் பக்தி ஸ்பெஷல்¢மற்றும் மதுரை சத்யம் பயோ நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை இன்று (29-ந்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடக்கிறது.

இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க விரும்பும் தாய்மார்கள் திருவிளக்கு மட்டுமே கொண்டு வந்தால் போதும். பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன், உங்கள் இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்படும்.

இறை பணியில் உங்களை இணைத்துக்கொண்டு, இல்லங்கள் தோறும், உங்கள் உள்ளங்கள் தோறும் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திட அனைவரையும் சத்யம் பயோ நிறுவனமும், சத்யம் குழுமமும் அன்புடன் வரவேற்கிறது.


Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!