Posts

Showing posts with the label thanthi news

தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா! மதுரை சத்யம் தொழில்குழுமம் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!

Image
தேனி, பிப்.17 - தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், அய்யம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஏழை காத்தம்மன், ஸ்ரீவல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், காளையர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தேனிமாவட்ட கலெக்டர் திருமதி பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மதுரை சத்யம் தொழில்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு வாடிவாசல் பகுதியில் அய்யம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தனலட்சும் அண்ணாதுரை, அய்யம்பட்டி கிராம கமிட்டி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்தனர். வாடிவாசலில் இருந்து துள்ளிக்...

வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி!

Image
வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி! பெங்களுரு, டிச.20 கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர், தற்போதைய விலை ஏற்றத்தால் பெருமளவில் பொருள் ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன என்ற விவசாயி, 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்துள்ளார். அண்மையில் அவர் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தார். தற்போதைய விலை ஏற்றத்தால் அவர் பெருமளவில் பணம் சம்பாதித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 200க்கு விற்பனையாகி வரும் நிலையில், அவர் மொத்த விலையில் எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்பது தெரியவில்லை . ஆனாலும் தற்போதைய சூழலில், அவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்திருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வியாபாரி 2 கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்திருக்க வாய்ப்பு இருப்பதாக சக வியாபாரிகள் கூறுகின்றனர்.

பச்சை மனிதனின் வித்தியாசமான மனுதாக்கல்!

Image
இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் பச்சை மனிதனின் வித்தியாசமான மனுதாக்கல்! அரியலூர், டிச.13- அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். இவர் அகில இந்திய மக்கள் சேவை இயக்க  விவசாய பிரிவு மாநில தலைவராக உள்ளார். பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் இவர் எப்போதும் பச்சை நிற வேஷ்டி சட்டை மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்து இருப்பார். நம்மாழ்வார் கொள்கையை பின்பற்றி மாநிலம் முழுவதும் பசுமையை காக்கவும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டியும், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று நூதன முறையில் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்.  அதேபோன்று நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பு தாக்கல் செய்தார். அப்போது அவர், கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவேன் என்ற உறுதி மொழியுடன் மரக்கன்றுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த போலீசார் மரக்கன்றை உள்ளே எடு...

ஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை! ”சொகுசானா வாழ்க்கை, உயர்ந்த சம்பளம் தராத நிம்மதி, விவசாயம் தருகிறது” - கடலூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார்.

Image
ஓர் பொறியாளன் விவசாயி ஆன கதை! ”சொகுசானா வாழ்க்கை, உயர்ந்த சம்பளம் தராத நிம்மதி, விவசாயம் தருகிறது” - கடலூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார்.  தற்பொழுது விவசாயத்தின் தேவையையும் அதனுடைய நிலைமையையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்ததே. விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிந்த நாம் தற்பொழுது இயற்கை விவசாயம் பற்றியும் விழிப்புணர்வு பெற்று வருகிறோம். அதனால் ஆர்கானிக் பொருட்கள் மீது ஒரு மோகம் ஏற்பட்டுள்ளது என்றுக் கூட கூறலாம்.  மேலோட்டமாக இயற்கை விவசாயம் என்று நாம் அதிகம் பேச, இங்கு ஒருவர் அதன் முக்கியத்துவத்தை அறிந்து தன் வசதியான வாழ்கையை துறந்து இயற்கை விவசாயத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலிருக்கும் கோட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் பொறியாளர் சிவக்குமார். சொகுசானா வாழ்க்கை, சிங்கப்பூரில் 2 லட்சத்திற்கு மேலான சம்பளம் என இருந்த சிவக்குமார் தற்பொழுது தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். சேலம் கல்லூரியில் 2005 பொறியியல் பட்டபடிப்பை முடித்த சிவக்குமார், ஒரு வருடம் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் பணிபுரிந்தார். அதன் பின் ஒரு சென்னை பொறிய...
Image
கதையல்ல... இது நிஜம் ... நம்புங்க பாஸ்!பொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி சம்பாதிக்கிறார் பிலாஸ்பூர் ,   நவ.30- வசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அரசாங்க ஊழியராகவே இருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் தன் நீண்ட நாள் கனவான விவசாயத்தைப் பின்பற்ற நினைத்தார். எனினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கள் அவருக்குப் பயமூட்ட போதுமானதாக இருந்தன.    வேளாண்மை கதையால் கவரப்பட்ட பேரன் வசந்த்தின் பேரன் சச்சின், கிராமத்திற்கு அடிக்கடி அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் அவரது தாத்தா கூறும் வேளாண்மை கதைகளால் கவரப்பட்டார். எனினும், இந்தியாவின் பல நடுத்தரக் குடும்பங்களைப் போலவே சச்சினின் பெற்றோரும் அவர் ஒரு பொறியாளர் அல்லது மருத்துவர் ஆக வேண்டும் என நினைத்தனர். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் சச்சினுக்கும் படிப்பது பிடித்திருந்த காரணத்தால் அவர் REC நாக்பூரில் (இப்போது VRCE என அழைக்கப்படும்) 2000 ஆம் அண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பொறியியல் பட்...

உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை!

Image
உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல்   - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை! மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது!! மதுரை, நவ.29 - உலக நன்மைக்காகவும், உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேற, நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திட குமுதம் பக்தி ஸ்பெஷல்¢மற்றும் மதுரை சத்யம் பயோ நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை இன்று (29 - ந்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடக்கிறது. இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க விரும்பும் தாய்மார்கள் திருவிளக்கு மட்டுமே கொண்டு வந்தால் போதும். பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன், உங்கள் இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்படும். இறை பணியில் உங்களை இணைத்துக்கொண்டு, இல்லங்கள் தோறும், உங்கள் உள்ளங்கள் தோறும் மக...

சத்யம் தொழிற் குழுமம்’ எனும் விருட்சம்

Image
வேடிக்கை பார்ப்பவன் நிலாவை காட்டி சோறு ஊட்டுகிறான்... சாதிக்க நினைப்பவன் சந்திரனில் சறுக்கி விளையாடத் துடிக்கிறான்... 15 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிய பயணம்... மதுரை நகர வீதிகளில் நடந்து செல்லும் இளைஞன். வேகமாய் கடந்து செல்லும் வாகனங்கள்... ஓட்டமும், நடையுமாய் பறந்து கொண்டிருக்கும் பாதசாரிகள்... எதை நோக்கி நாம் செல்லப்போகிறோம். நல்ல வேலை கிடைத்துவிட்டால் நாமும் சீக்கிரமே செட்டிலாகி விடலாம் என்கிற சராசரி இளைஞனுக்குரிய என்ற சிந்தனை ஓட்டங்கள் ஆழ் மனதுக்குள் துரத்திக்கொண்டிருக்க செந்தில்குமார் என்கிற அந்த இளைஞன் ஆயிரமாயிரம் கேள்விகளோடு எதிர்நடை போடுகிறார்... எதுவாக நீ நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய் என்கிற கீதையின் வரிகள் சிந்தையில் பொறி கிளப்புகிறது. சின்னஞ்சிறு வயதில் கிராமத்து வயல்வெளிகளில் ஓடியாடியது நினைவுகளில் கரைபுரண்டோடுகிறது. பச்சை பசேலென பூத்துக்குலுங்கிய வயல்கள், இன்று வறண்ட பூமியாய் மாறிக்கிடப்பது மின்னலாய் வந்து போகிறது. மனம் ஒரு கணம் கனத்துப்போகிறது. நமக்குள்ளும் ஒரு கிராமத்தான் இருக்கிறான் தானே. செந்தில்குமாருக்குள்ளும் அந்த கிராமத்தானின் குரல் கேட்கத்தான் செய்தது....

கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான வராலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தல வரலாறு!

Image
கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான  வரலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்கு ன் றம் முருகன் கோயில் தல வரலாறு! மதுரை சத்யம் பயோ நிறுவன நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் காணிக்கையாக வழங்கினார்!! மதுரை, அக்.21 - தமிழ்க்கடவுளான அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் தலவரலாறு மதுரை சத்யம் பயோ நிறுவனத்தால் திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியிடப்பட்டு திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த நூலினை திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் மணிமாறன், புகழேந்தி, கார்த்திக், மணிகண்டன் பட்டர் உள்ளிட்டோரிடம் சத்யம் பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் வழங்கினார். திருக்கோயில் சார்பில் சத்யம் பயோ நிறுவனருக்கு முருகப்பெருமானின் அருள்பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தலவரலாறு நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்... இத்தல வரலாறு புத்தகம் மொத்தம் 88 பக்கங்களை உள்ளடக்கியது. இந்த புத்தகத்தில் ...

இயற்கை உரங்களால் விவசாயத்துக்கு உயிரூட்டும் இளைஞர்!

Image
இயற்கை உரங்களால் விவசாயத்துக்கு உயிரூட்டும் இளைஞர் ! இந்த உலகின் ஆதாரம் உணவு . உணவில்லையேல் உயிரில்லை . ஆனால் , இன்று அந்த உணவே கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாகி , நம் உயிரை எடுக்கத் தொடங்கியிருக்கிறது . இதற்கெல்லாம் அடிப்படை , இயற்கை     விவசாயத்தை மறந்து , ரசாயனம் மிகுந்த உரங்களுடன் விவசாயத்தை மேற்கொண்டதுதான் என்கின்றனர் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் . ரசாயனங்களால் இந்த மண் மலடாகிக் கொண்டிருக்கும் சூழலில் ,       இனியாவது இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு , நம்மையும் , எதிர்கால சந்ததிகளையும்   பாதுகாப்போமா என்பதே நம்முன் நிற்கும் மில்லியன்    டாலர் கேள்வி . இந்த கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் விடை உண்டு என்கிறார் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இயற்கை உரங்கள் தயாரிப்பு நிறுவனமான சத்யம் பயோ குழுமத்தின் தலைவரான வி . செந்தில்குமார் . 2004& ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவரது சத்யம் பயோ இயற்கை உரம் நிறுவனம் கடல் வழித்தாவரங்களில் இருந்து கிடைக்கின்ற ...