Posts

Image
2020 புத்தாண்டை முன்னிட்டு வேளாண்மைத்துறை அமைச்சருடன் சத்யம் குழுமம் நிறுவனர் சந்திப்பு! பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!! சென்னை, ஜன.03- 2020   புத்தாண்டு ஜனவரி முதல்தேதியன்று சென்னையில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.துரைக்கண்ணு அவர்களை மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் நிறுவனரும், சத்யம் பயோ நிறுவனத்தின் அதிபருமான திரு. வி.செந்தில்குமார் அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மலர்க்கொத்து வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சத்யம்பயோ நிறுவனர் திரு.வி.செந்தில்குமார் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மரியாதை நிமித்தமான இச்சந்திப்பின் போது, அமைச்சர் அவர்களும் தமது உளப்பூர்வமான வாழ்த்துக்களை சத்யம் தொழிற்குழுமத்தின் நிறுவனருக்கு தெரிவித்துக்கொண்டார்.

சத்யம் குழுமத்தின் புத்தாண்டு கொண்டாட்டம் 2020

Image
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சத்யம் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் வரவேற்பு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது .  புத்தாண்டு வரவேற்பு விழாவை சிறப்பாக்கும் விதமாக சத்யம் குழும நிறுவனர் மற்றும் தலைவர் திரு.V .செந்தில் குமார் அவர்களும்  இளம் இயக்குனர் திரு .நித்திஷ்  செந்தில் குமார் அவர்களும் சத்யம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட சிறப்பு காட்சி. நூற்றுக்கு நுறு மதிப்பெண் எடுப்பது போல 20 / 20  நமக்கு சிறப்பான ஆண்டாக அமையும் என்றும், சத்யம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என்ற வாழ்த்து செய்தியை திரு.V .செந்தில் குமார் அவர்கள் வழங்கினார். விழாவில் திரு .நித்திஷ்  செந்தில் குமார்  கலந்து கொண்டு சிறப்பித்தது  அனைவருக்கும் புது உற்சாகமாக இருந்தது. விழாவில் கேக் வெட்டி சிறப்பு செய்தார்.
Image
சாலையோரங்களில் மரக்கன்றுகளை வளர்த்து வரும் சிவகங்கை   எஸ் . ஐ . ! சிவகங்கை , டிச .25- சிவகங்கை சிறப்பு எஸ்ஐ ஒருவர், தனது ஓய்வு நேரத்தில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை 2013-ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக சாலையோரங்களில் இருந்த பல ஆயிரம் பழமையான மரங்கள் அழிக்கப்பட்டன. ஆனால் அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒரு மரக்கன்று கூட நடவு செய்யவில்லை. இதனால் கோடைக்காலங்களில் வாகனங்களில் செல்வோருக்கு வெப்பத் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து சிவகங்கை தாலுகா காவல்நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரியும் எம்.ஜி.ராமச்சந்திரன் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நாட்டரசன்கோட்டை அருகே குளிர்ந்த சூழ்நிலையை உருவாக்குவதற்காக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார்.மேலும் இவர் ஓய்வு நேரங்களில் மட்டுமே இந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார். பணிப்பளு நிறைந்த காவல் பணியில் மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாத்து வரும் சிறப்பு எஸ்.ஐயின் செயலை வாகன ஓட்டிகள் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து எம்.ஜி.ராமச்சந்திரன் கூறியதாவது: சால...

தேசிய விவசாயிகள் தினத்தில் பெரியகுளம் தென்கரையில் உதயமானது F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி!

Image
தேசிய விவசாயிகள் தினத்தில் பெரியகுளம் தென்கரையில் உதயமானது F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி! துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சகோதரர், ஆவின் தலைவர் ஓ.ராஜா திறந்து வைத்தார்!! பெரியகுளம், டிச.24 - தேசிய விவசாயிகள் தினத்தன்று தேனிமாவட்டம் பெரியகுளம், தென்கரையில் மதுரை சத்யம் பயோ இயற்கை உரம் நிறுவனத்தின்   F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. மீனா டிரேடர்ஸின் உரிமையாளரும், பாரம்பரிய விவசாயியுமான லோகநாதன்,   F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின்   புதிய பிரான்சைஸி உரிமையை பெற்றுள்ளார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், மதுரை மண்டல ஆவின் தலைவருமான ஓ.ராஜா கலந்து கொண்டு, தமது திருக்கரங்களால் குத்துவிளக்கேற்றி வைத்து, புதிய பிரான்சைஸியை திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் சத்யம் பயோ பொது மேலாளர் c.ஞானசேகரன், வணிகத்தலைவர் எம். சக்திவேல், மண்டல விற்பனை மேலாளர் வி.அருண்குமார், விற்பனை மேம்பாட்டு அலுவலர் சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்....

விவசாயம் செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரி!

Image
WE SALUTE TO FARMERS… விவசாயம் செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரி! இந்திய அளவில் உயர் பதவியான ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வாகி, பத்தாண்டுகளுக்குப் பின் அதைத் தூக்கி எறிந்து இளைஞர்களைத் திரட்டும் பணியில் இறங்கியுள்ளார் அண்ணாமலை ஐபிஎஸ். ஓய்வு நேரத்தில் விவசாயத்திலும் ஈடுபடுகிறார். இந்தியாவில் ஒவ்வொரு இளைஞனுக்கும் உயரிய லட்சியங்கள் இருக்கும். அதில் முக்கியமான ஒன்று சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஆட்சிப்பணி, காவல் பணிக்கு வருவது என்பதாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் நேரடியாக அதிகாரத்துடன் மக்கள் பணியை ஆற்றலாம் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். கஷ்டப்பட்டு ஆட்சிப் பணி, காவல் பணிக்கு வரும் நபர்கள் மக்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் உன்னதமாகப் பணியாற்றுபவர்கள் பலர். இப்படி வாழ்வின் உச்சத்துக்கு வந்த தமிழக இளைஞர்களில் ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பணியில் வென்று கர்நாடக கேடராக பல மாவட்டங்களில் எஸ்.பி.யாகப் பணியாற்றி, பெங்களூர் நகர துணை ஆணையராகப் பணியாற்றும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது முடிவு பெங்களூரு தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. முதல்வர் குமாரசாமியுடன் மோதல், அதனால் ராஜ...

வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி!

Image
வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி! பெங்களுரு, டிச.20 கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர், தற்போதைய விலை ஏற்றத்தால் பெருமளவில் பொருள் ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன என்ற விவசாயி, 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்துள்ளார். அண்மையில் அவர் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தார். தற்போதைய விலை ஏற்றத்தால் அவர் பெருமளவில் பணம் சம்பாதித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 200க்கு விற்பனையாகி வரும் நிலையில், அவர் மொத்த விலையில் எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்பது தெரியவில்லை . ஆனாலும் தற்போதைய சூழலில், அவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்திருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வியாபாரி 2 கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்திருக்க வாய்ப்பு இருப்பதாக சக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சத்யம் தொழிற் குழுமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை குழுவினர்!

Image
சத்யம் தொழிற் குழுமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை குழுவினர்!                 இயற்கை உரங்கள் உற்பத்தியை பார்வையிட்டு,                       நவீன தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்!! மதுரை, டிச.16 - மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் அங்கமான மேலமாத்தூர் சத்யம் கிஸான் கேர் தொழிற்சாலையை   கோவை வேளாண் பல்கலைகழகத்தின் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நவீன தொழில் நுட்பத்தில் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தனர். மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் அங்கமான சத்யம் கிஸான்கேர் நிறுவனம் ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்களை உற்பத்தி செய்து நாடு முழுக்க விற்பனை செய்து வருவதுடன், இயற்கை விவசாயத்துக்கு மாறி வரும் விவசாய பெருமக்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும், பாராட்டையும் குவித்து வருகிறது. ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில், அதன் வளர்ச்சியையும், உற்பத்தியையும் இருமடங்கு பெருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, ஆழ்கடல் பகுதியில் இருந்து சேகரிக்கப்படுகின்ற க...