சத்யம் தொழிற் குழுமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலை குழுவினர்!


சத்யம் தொழிற் குழுமத்தில்தமிழ்நாடு வேளாண் பல்கலை குழுவினர்!

                இயற்கை உரங்கள் உற்பத்தியை பார்வையிட்டு,                      
நவீன தொழில்நுட்பங்களை கேட்டறிந்தனர்!!


மதுரை, டிச.16-
மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் அங்கமான மேலமாத்தூர் சத்யம் கிஸான் கேர் தொழிற்சாலையை  கோவை வேளாண் பல்கலைகழகத்தின் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நவீன தொழில் நுட்பத்தில் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தனர்.

மதுரை சத்யம் தொழிற்குழுமத்தின் அங்கமான சத்யம் கிஸான்கேர் நிறுவனம் ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்களை உற்பத்தி செய்து நாடு முழுக்க விற்பனை செய்து வருவதுடன், இயற்கை விவசாயத்துக்கு மாறி வரும் விவசாய பெருமக்களின் ஒட்டு மொத்த வரவேற்பையும், பாராட்டையும் குவித்து வருகிறது. ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில், அதன் வளர்ச்சியையும், உற்பத்தியையும் இருமடங்கு பெருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி, ஆழ்கடல் பகுதியில் இருந்து சேகரிக்கப்படுகின்ற கடல்பாசியிலிருந்து அதன் மூலக்கூறுகளை சாறாக பிரித்தெடுத்து, முழுக்க, முழுக்க இயற்கை மூலப்பொருட்களுடன் பயிர்களுக்கு ஏற்ற வகையில் மிகச்சிறந்த வளர்ச்சி ஊக்கிகள் கொண்ட உரங்களாக மாற்றித் தருவதே சத்யம் கிஸான்கேர் நிறுவனத்தின் சிறப்பம்சம். இதன் பெருமைமிகு தயாரிப்புகள் ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்களாக, பயோஜைம் ஜெல், ப்ளூமர், ஈல்டர், நியூட்ரி 6, ப்ளாக் டைமண்ட், பயோ காம்ப்ளக்ஸ், சூப்பர் ஹியூமிக், அல்ஜினிக் ஜி, டோரா என், ஜின்கோ, வின்டேஜ், ஜெம், ஜலசக்தி என்ற பெயர்களுடன் விற்பனைக்கு வருகின்றன.


நாடு முழுக்க விவசாய பெருமக்களின் பேராதரவை பெற்று வரும் ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்களின் உற்பத்திக்கூடமான மதுரை மேலமாத்தூர் சத்யம் கிஸான்கேர் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் வேளாண் தொழில் மேம்பாட்டு இயக்குனரகத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.ஞானசம்பந்தம் தலைமையில் பேராசிரியர்கள், ஆய்வு மாணவ, மாணவியர் நேரில் வருகைபுரிந்தனர். அவர்களை சத்யம் கிஸான்கேர் நிறுவனத்தின் வணிகத்தலைவர் ராஜேஷ்குமார், தொழிற்சாலையின் மேலாளர் பாலாஜி, ஆய்வுக் கூடத்தின் மைக்ரோபயாலஜிஸ்ட் திலகர்ராஜ் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர். தொழிற்சாலையின் ஆய்வுக்கூடம், உற்பத்திப் பிரிவு, உரக்கிடங்கு, தரப்பரிசோதனைக்கூடம், உர பேக்கேஜிங் பிரிவு என தொழிற்சாலையின் அனைத்துப்பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் குழுவினர், தொழிற்சாலையின் அனைத்துப்பகுதிகளையும், சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதற்கு பாராட்டு தெரிவித்தனர். உரங்களை உற்பத்தி செய்யும் பிரிவில் அதி நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய இயந்திரங்களின் செயல்பாட்டையும் பார்த்து வியந்தனர். ஆய்வுக்கூடம் நூறுசதவீதம் தூய்மையாக பராமரிக்கப்படுவதற்கு பாராட்டு தெரிவித்தனர். தொழிற்சாலையின் முழுக்கட்டமைப்பும் மிக நேர்த்தியாகவும், நவீன தொழில் நுட்ப வசதிகளுடனும் செயல்படுவதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் தலைமை செயல் அதிகாரி ஞானசம்பந்தம் கூறுகையில், பெரும்பாலான விவசாயிகள் இரசாயன உரங்களால் ஏற்படுகின்ற பாதிப்புகளை உணர்ந்து, வேகமாக இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகமும் ஊக்குவித்து வருகிறது. வரும் காலங்களில், அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படுகின்ற உணவுப்பொருட்களை கிடைக்க செய்தாலே, நிச்சயம் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கி விட முடியும். எனவே அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டியது அவசியம் என்றார்.

சக்தி கிஸான்கேர் நிறுவனத்தின், ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்கள் கடற்பாசியிலிருந்து எவ்வாறு மிக நேர்த்தியாக, நவீன தொழில்நுட்ப முறையில் இயற்கை உரங்களாக பிரித்தெடுக்கப்படுகிறது என்பதை நேரடி செயல் விளக்கங்களுடன் வணிகத்தலைவர் ராஜேஷ்குமார், தொழிற்சாலையின் மேலாளர் பாலாஜி, மைக்ரோபயாலஜிஸ்ட் திலகர்ராஜ் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.

இரசாயன உரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற வேளாண்பொருட்களுக்கும், இயற்கை உரங்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற வேளாண் பொருட்களுக்கும் உள்ள வேறுபாடுகளை மைக்ரோபயாலஜிஸ்ட் திலகர்ராஜ் விரிவாக எடுத்துரைத்தார். இரசாயன உரம் பயன்படுத்தும் விவசாயியும், இயற்கை உரம் பயன்படுத்தும் விவசாயியும் உழைப்பை பொறுத்தமட்டில் ஒரேமாதிரியான உழைப்பையே தருகின்றனர். ஆனால் பொருட்களின் தரமும், அதனால் கிடைக்கின்ற லாபமும் வித்தியாசப்படுகிறது.

குறிப்பாக இரசாயன உரங்களால் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களில் கிடைக்கின்ற லாபத்தை விட, இயற்கை உரங்களால் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களை விற்கின்ற விவசாயி நிச்சயமாக மூன்று முதல் நான்கு மடங்கு லாபத்தை பெற முடியும். இதற்கு இயற்கை உணவுப்பொருட்கள் குறித்து மக்களிடம் அதிகரித்து வரும் விழிப்புணர்வும் ஒரு காரணம். இயற்கை உரங்களால் உற்பத்தியாகும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியத்துக்கு முழு உத்தரவாதம் தருகின்றன என்பதால் மக்கள் அதை வாங்க தயாராக இருக்கின்றனர். இந்த நல்வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்றார். நீண்டகாலமாக இரசாயன உரங்களை பயன்படுத்தி வந்த மதுரை சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தைச்  சேர்ந்த வாழை விவசாயியான பாலமுருகன், ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்களை பயன்படுத்தி, அதன் பயன்களை பெறத்தொடங்கியது முதல் முழுமையாக இயற்கை உரத்துக்கு மாறிவிட்டார் என்பதை ஆதாரத்துடன் கோடிட்டு காட்டினார்.  இதுபோல் லட்சக்கணக்கான விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறிவருகின்றனர் எனக் குறிப்பிட்டார். இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் குழுவினர் ஆமோதித்ததுடன், இயற்கை உரம் தயாரிப்பில் முழு அர்ப்பணிப்போடு ஈடுபட்டுள்ள சத்யம் கிஸான்கேர் நிறுவனத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக உறுதி அளித்து விடைபெற்றனர்.

 






Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!