வெங்காயத்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரனான விவசாயி!


வெங்காயத்தால் ஓவர்நைட்டில்
கோடீஸ்வரனான விவசாயி!


பெங்களுரு, டிச.20

கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர், தற்போதைய விலை ஏற்றத்தால் பெருமளவில் பொருள் ஈட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன என்ற விவசாயி, 5 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்துள்ளார்.

அண்மையில் அவர் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தார். தற்போதைய விலை ஏற்றத்தால் அவர் பெருமளவில் பணம் சம்பாதித்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சில்லறை விற்பனையில் வெங்காயம் கிலோ 200க்கு விற்பனையாகி வரும் நிலையில், அவர் மொத்த விலையில் எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்பது தெரியவில்லை .


ஆனாலும் தற்போதைய சூழலில், அவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்திருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வியாபாரி 2 கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்திருக்க வாய்ப்பு இருப்பதாக சக வியாபாரிகள் கூறுகின்றனர்.




Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!