விவசாயம் செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரி!
WE SALUTE TO
FARMERS…
விவசாயம் செய்யும்
ஐ.பி.எஸ். அதிகாரி!
இந்திய அளவில் உயர் பதவியான ஐபிஎஸ் அதிகாரியாகத்
தேர்வாகி, பத்தாண்டுகளுக்குப் பின் அதைத் தூக்கி எறிந்து இளைஞர்களைத் திரட்டும் பணியில்
இறங்கியுள்ளார் அண்ணாமலை ஐபிஎஸ். ஓய்வு நேரத்தில் விவசாயத்திலும் ஈடுபடுகிறார்.
இந்தியாவில் ஒவ்வொரு இளைஞனுக்கும் உயரிய லட்சியங்கள்
இருக்கும். அதில் முக்கியமான ஒன்று சிவில் சர்வீஸ் தேர்வெழுதி ஆட்சிப்பணி, காவல் பணிக்கு
வருவது என்பதாகும். ஐஏஎஸ், ஐபிஎஸ் என்றால் நேரடியாக அதிகாரத்துடன் மக்கள் பணியை ஆற்றலாம்
என்பது அனைவரின் எண்ணமாக இருக்கும். கஷ்டப்பட்டு ஆட்சிப் பணி, காவல் பணிக்கு வரும்
நபர்கள் மக்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் உன்னதமாகப் பணியாற்றுபவர்கள் பலர்.
இப்படி வாழ்வின் உச்சத்துக்கு வந்த தமிழக இளைஞர்களில்
ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் பணியில் வென்று கர்நாடக கேடராக பல மாவட்டங்களில் எஸ்.பி.யாகப்
பணியாற்றி, பெங்களூர் நகர துணை ஆணையராகப் பணியாற்றும்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது முடிவு பெங்களூரு தாண்டி தமிழகம் முழுவதும் எதிரொலித்தது.
முதல்வர் குமாரசாமியுடன் மோதல், அதனால் ராஜினாமா?
என்றெல்லாம் செய்தி பரவியது. ஒரு ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆளும் அரசியல் தலைவர்களுடன்
உரசல் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு வரும்போது அவர்கள் டெல்லிக்கு அயல் பணியில் செல்ல
வாய்ப்புள்ளது. அப்படியானால் அதையும் செய்யாமல் அண்ணாமலை ராஜினாமா செய்ததற்கு அவர்
குமாரசாமியுடன் மோதலில் ஈடுபட்டது காரணமல்ல என்பது தெரியவந்தது.
அண்ணாமலை தான் மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக,
நேரடியாகக் களத்தில் இறங்க, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூரில் சொந்த மாவட்டத்தில்
தனது நிலத்தில் விவசாயம் செய்துகொண்டே, காணாமல்போன ஏரிகளை, நீர்நிலைகளை மீட்பது, காங்கேயம்
காளை இனத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
WE SALUTE TO FARMERS!
-----------------------------
Comments
Post a Comment