தேசிய விவசாயிகள் தினத்தில் பெரியகுளம் தென்கரையில் உதயமானது F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி!
தேசிய விவசாயிகள் தினத்தில்
பெரியகுளம் தென்கரையில் உதயமானது
F3 ஆர்கானிக் மார்க்கெட்டின்
புதிய பிரான்சைஸி!
துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
சகோதரர்,
ஆவின் தலைவர் ஓ.ராஜா திறந்து
வைத்தார்!!
பெரியகுளம், டிச.24-
தேசிய விவசாயிகள் தினத்தன்று தேனிமாவட்டம் பெரியகுளம், தென்கரையில் மதுரை சத்யம்
பயோ இயற்கை உரம் நிறுவனத்தின் F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்பு விழா கோலாகலமாக
நடைபெற்றது. மீனா டிரேடர்ஸின் உரிமையாளரும், பாரம்பரிய விவசாயியுமான லோகநாதன், F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி உரிமையை பெற்றுள்ளார்.
திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும்,
மதுரை மண்டல ஆவின் தலைவருமான ஓ.ராஜா கலந்து கொண்டு, தமது திருக்கரங்களால் குத்துவிளக்கேற்றி
வைத்து, புதிய பிரான்சைஸியை திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் சத்யம் பயோ பொது மேலாளர் c.ஞானசேகரன், வணிகத்தலைவர் எம். சக்திவேல்,
மண்டல விற்பனை மேலாளர் வி.அருண்குமார், விற்பனை மேம்பாட்டு அலுவலர் சதீஷ் மற்றும் பலர்
கலந்து கொண்டனர்.
உலகின் முதல்தர இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனமான சத்யம் பயோ நிறுவனத்தின் அனைத்து வகையான இயற்கை உரங்களும் F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் வாயிலாக விவசாயிகளுக்கு நேரடியாக
கிடைக்கும். நாடு முழுக்க இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும், இயற்கை உரம் பயன்பாட்டின்
அத்தியாவசியத்தையும் விவசாயிகள் மத்தியில் கொண்டு செல்லும் உன்னத நோக்கத்தோடு F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸிகளை சத்யம் பயோ நிறுவனம் நிறுவி
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த
விலை, உயர்ந்த தரம்... அதுவே சத்யம் பயோவின் தாரக மந்திரம்!
Comments
Post a Comment