Posts

உலக நன்மைக்காகவும், இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை!

Image
உலக நன்மைக்காகவும், இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் & மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய மாபெரும் திருவிளக்கு பூஜை! கொட்டும் மழையிலும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நூற்றுக்கணக்கான பெண்கள் பரவசத்துடன் பங்கேற்றனர்!! மதுரை, நவ.30- உலக நன்மைக்காகவும்,   வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேறவும், நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திடவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் மற்றும் மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்திய பிரமாண்ட திருவிளக்கு பூஜை நவம்பர் 29&ந்தேதி   வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மிகவும் சிறப்பாக நடந்தது.   இந்த திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான தாய்மார்கள் ஆர்வத்துடன் திருவிளக்குகளுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன், இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்பட்டது. ...
Image
கதையல்ல... இது நிஜம் ... நம்புங்க பாஸ்!பொறியாளராக 24 இலட்சம் சம்பாதித்தவர் இன்று விவசாயியாக 2 கோடி சம்பாதிக்கிறார் பிலாஸ்பூர் ,   நவ.30- வசந்த் ராவ் காலே சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் மாநிலத்தில் உள்ள மெதாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு அரசாங்க ஊழியராகவே இருந்தார். வேலையில் இருந்து ஓய்வு பெற்றதும் தன் நீண்ட நாள் கனவான விவசாயத்தைப் பின்பற்ற நினைத்தார். எனினும் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் வழக்கமான சவால்கள் அவருக்குப் பயமூட்ட போதுமானதாக இருந்தன.    வேளாண்மை கதையால் கவரப்பட்ட பேரன் வசந்த்தின் பேரன் சச்சின், கிராமத்திற்கு அடிக்கடி அவரைப் பார்க்க வரும்போதெல்லாம் அவரது தாத்தா கூறும் வேளாண்மை கதைகளால் கவரப்பட்டார். எனினும், இந்தியாவின் பல நடுத்தரக் குடும்பங்களைப் போலவே சச்சினின் பெற்றோரும் அவர் ஒரு பொறியாளர் அல்லது மருத்துவர் ஆக வேண்டும் என நினைத்தனர். மெக்கானிக்கல் எஞ்சினியரிங் சச்சினுக்கும் படிப்பது பிடித்திருந்த காரணத்தால் அவர் REC நாக்பூரில் (இப்போது VRCE என அழைக்கப்படும்) 2000 ஆம் அண்டு மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பொறியியல் பட்...

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் -பகுதி - 5

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள்- பகுதி - 5 உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானிய மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்... முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் இத்திட்டத்தின்கீழ் சிறு குறு உழவர்கள் பலன் பெறலாம். நேரடியாகப் பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயதுடைய சிறு, குறு உழவர்கள், குத்தகைதாரர்கள், விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் சிறு,குறு உழவர்களும் குடும்பத்தினரும் இணைய முடியும். இதற்காக அடையாள அட்டை வருவாய்த் துறையினர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பங்கு பெறும் உழவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக்குத் தகுந்தவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் உறுப்பினரோ அவரைச் சார்ந்தவரோ இறக்க  நேரிடும்  பட்சத்தில் ஈமச்சடங்கு நிவாரணம் வழங்கப்படும். உழவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறும் இத்திட்டம் வருவாய்த் துறையின் மூலம் நடைமுறைபடுத்தப்படுகிறது. தென்னை மரங்களுக்கான பயிர்க் காப்பீட்டுத்...

உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல் - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை!

Image
உலக நன்மைக்காகவும், உங்கள் இல்லங்களில் சந்தோசம் பெருகவும் குமுதம் பக்தி ஸ்பெஷல்   - மதுரை சத்யம் பயோ நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் திருவிளக்கு பூஜை! மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது!! மதுரை, நவ.29 - உலக நன்மைக்காகவும், உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களுடன் மகாலட்சுமி குடியேற, நிம்மதி, சந்தோஷம் உற்சாகம் நிறைந்திட குமுதம் பக்தி ஸ்பெஷல்¢மற்றும் மதுரை சத்யம் பயோ நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை இன்று (29 - ந்தேதி) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் மதுரை மேலமாசி வீதியில் உள்ள சிவகங்கை சமஸ்தானத்துக்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடக்கிறது. இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்க விரும்பும் தாய்மார்கள் திருவிளக்கு மட்டுமே கொண்டு வந்தால் போதும். பூஜைக்கு தேவையான பொருட்கள், திருவிளக்கு பூஜை புத்தகம், பிரசாதம் ஆகியவற்றுடன், உங்கள் இல்லங்களில் உள்ள வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான பூஜிக்கப்பட்ட எந்திரமும் வழங்கப்படும். இறை பணியில் உங்களை இணைத்துக்கொண்டு, இல்லங்கள் தோறும், உங்கள் உள்ளங்கள் தோறும் மக...

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் பகுதி - 4

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானிய மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்... தமிழ்நாடு உழவர் நல நிதித் திட்டம் இத்திட்டம் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அந்தந்தப் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக ஒரு வருடத்துக்கு ஒரு முறை அல்லது அதிக அளவு தங்களது விளைச்சலை விற்கும் அனைத்து உழவர்களும் இதில் சேரலாம். இத்திட்டத்தின் உறுப்பினர்.  எதிர்பாராத விபத்தின் காரணமாக மரணமடைந்தாலும் அல்லது பாம்புக்கடியின் காரணமாக மரணமடைதாலும் ரூ.1லட்சம்வரை குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடைக்கும். விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமுற்றால் ரூ.75,000-ம் சிறிய அளவிளான ஊனத்திற்கு ரூ.50,000-ம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் முழு விவரங்களை அறிய அந்தந்த வட்டார ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளர் அல்லது மேற்பார்வையாளரை அணுகிப் பயன்பெறலாம். நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...

உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் - பகுதி -3

Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் உழவர்களை வாழவைக்க மத்திய, மாநில அரசாங்கங்களே பல்வேறு மானியம்  மற்றும் சலுகை திட்டங்களையும், குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களையும் வழங்குகின்றன. அதைப்பற்றிய கண்ணோட்டம்... பிரதம மந்திரியின் உழவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட சிறு, குறு உழவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதற்கான பிரீமியத் தொகை அவரவர் வயதுக்கேற்ப மாறுபடும். மாதந்தோறும் 18 வயதுடைய ஒருவர் 55 ரூபாயும் அதே சமயம் 40 வயதுடைய ஒருவர் 200 ரூபாயும் இத்திட்டத்தில் செலுத்த வேண்டும். இடைப்பட்ட வயதுடையவர்கள் அவர்களின் வயதுக்கேற்ப பணம் செலுத்தும் தொகை மாறுபடும். 60 வயதுக்குப் பின்பு மாதந்தோறும் ரூ.3,000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேரும். இத்திட்டத்தில் சேரத் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினிபட்டா அல்லது சிட்டா, ஆதார் எண் அட்டை, வங்கி பாஸ் புத்தகம், நகல் ஆகியவற்றை ஆவணங்களாக பயன்படுத்திப் பொது சேவை மையங்களில் இத்திட்டத்தில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதி வேளாண்மைத் துறை விரிவாக்கப்...
Image
உழவர்களுக்கான உன்னத திட்டங்கள் வேளாண்மையில் உழவுத் தொழிலை முன்னெடுக்கும் ஒருவர் மத்திய, மாநில அரசின் வேளாண் சார்ந்த குறிப்பாக உழவர் நலன் சார்ந்த நலத்திட்டங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமானது. அந்தத் திட்டங்களில் தங்களை இணைத்துக் கொள்ளவும் வேண்டும். பாரதப் பிரதமரின் கிஸான் சம்மான் நிதி திட்டம் இத்திட்டத்தின்கீழ் உழவர்கள் சமூகப் பாதுகாப்புக்காக வருடந்தோறும் மூன்று தவணைகளாக ஆண்டொன்றுக்கு ரூ.6000 நிதி உதவியை மத்திய அரசு வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர பொதுச் சேவை மையங்களை அணுக வேண்டும். தங்களுடைய நில உடைமை ஆவணங்களான கணினி பட்டா அல்லது சிட்டா வங்கிக் கணக்குப் புத்தக நகல், ஆதார் அட்டையின் நகல் ஆகிய ஆவணங்கள் தேவை. இது தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற அந்தந்தப் பகுதி வேளாண்மைத்துறை விரிவாக்க அலுவலர்களை அணுகிப் பயன்பெறலாம். நாளை மற்றுமொரு திட்டத்துடன் சந்திப்போம்...