இயற்கை உரங்களால் விவசாயத்துக்கு உயிரூட்டும் இளைஞர்!


இயற்கை உரங்களால்

விவசாயத்துக்கு


உயிரூட்டும் இளைஞர்!


இந்த உலகின் ஆதாரம் உணவு. உணவில்லையேல் உயிரில்லை. ஆனால், இன்று அந்த உணவே கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சாகி, நம் உயிரை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. இதற்கெல்லாம் அடிப்படை, இயற்கை    விவசாயத்தை மறந்து, ரசாயனம் மிகுந்த உரங்களுடன் விவசாயத்தை மேற்கொண்டதுதான் என்கின்றனர் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்.

ரசாயனங்களால் இந்த மண் மலடாகிக் கொண்டிருக்கும் சூழலில்,      இனியாவது இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு, நம்மையும், எதிர்கால சந்ததிகளையும்  பாதுகாப்போமா என்பதே நம்முன் நிற்கும் மில்லியன்   டாலர் கேள்வி.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் நிச்சயம் விடை உண்டு என்கிறார் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இயற்கை உரங்கள் தயாரிப்பு நிறுவனமான சத்யம் பயோ குழுமத்தின் தலைவரான வி.செந்தில்குமார்.

2004&ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இவரது சத்யம் பயோ இயற்கை உரம் நிறுவனம் கடல் வழித்தாவரங்களில் இருந்து கிடைக்கின்ற மூலப்பொருட்களில் இருந்து சக்தி இயற்கை உரங்கள் தயாரிக்கும் முயற்சியை முன்னெடுத்தது. இந்த இயற்கை உரங்களால் ஏற்கனவே பாழாகிப்போன மண் கூட மீண்டும் உயிர் பெற்று வளமான விளைச்சலுக்கு வழிவகுத்திருப்பதைப்பார்த்து பூரித்துப்போன விவசாயிகள் வி.செந்தில்குமாரின் தயாரிப்புகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்த தொடங்கினர். ஒரு பக்கம் அதிகரிக்கின்ற மண்வளம், இன்னொரு பக்கம் அமோகமான விளைச்சல் என இரட்டைப்பயன்களால் விவசாயிகளிடம் சக்தி இயற்கை உரங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பை கண்டு தனது தயாரிப்புகளை விரிவுப்படுத்தினார் வி.செந்தில்குமார்.


சத்யம் பயோ, சக்தி கிஸான் கேர் என்ற நிறுவனங்களின் மூலமாக சக்தி இயற்கை உரங்கள், ஸ்ரீசமுத்ரா இயற்கை உரங்கள் என்ற பெயர்களில் அனைத்துவகை பயிர்கள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள், தென்னை, வாழை மற்றும் அனைத்து வகையான பணப்பயிர்கள்,  வீட்டுத்தோட்டங்கள், மாடித்தோட்டங்கள் என அனைத்து வகை விவசாயத்துக்கும் ஏற்றவகையில் சக்தி சர்கா ஜெல்லி, சக்தி சம்பூர்ணா, சக்தி எர்த்பவர், சக்தி அமோகா, சக்தி கிராப்டாப், சக்தி கோகோபவர், சக்தி பனானா பிளஸ், சக்தி சாயில்கோல்டு, சக்தி அஸ்கோ கிங், சக்தி கோல்டுஜெல், சக்தி சில்வர்ஜெல் என 40&க்கும் மேற்பட்ட உரங்களை தயாரித்து வருகிறார். இதற்கென மதுரைக்கு அருகில் இரு தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன.



சக்தி இயற்கை உரங்கள் தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுக்க பரவலாக விற்பனையாகி வருகிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் சக்தி இயற்கை உரங்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர்.

 விவசாயிகளுக்கு இயற்கை உரங்கள் மட்டுமின்றி, அவர்கள் வளர்க்கின்ற கால்நடைகளுக்கான சத்தான தீவனங்களும், மக்கள் நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான இயற்கை உணவுகளும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காவே தற்போது F3 ஆர்கானிக் மார்க்கெட் என்கிற விற்பனை மையங்களை துவக்கி உள்ளார் வி.செந்தில் -குமார். 

அது மட்டுமின்றி விவசாயம் மீது ஆர்வம் கொண்ட, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பிரான்சைஸி ஆகும் வாய்ப்புகளையும் F3 ஆர்கானிக் மார்க்கெட் வழங்குகிறது.

சக்தி இயற்கை உரங்களை வாங்குகின்ற விவசாயிகள் வாழ்விலும் உயர்வு பெற வேண்டும் என்பதற்காகவே தமிழகம் முழுக்க தமது நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான களப்பணியாளர்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார் வி.செந்தில்குமார். அது மட்டுமின்றி விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை தொலைபேசி வாயிலாக தீர்த்துக்கொள்ளும் வகையில் இலவச டெலி காலிங் சேவை மையத்தையும் செயல்படுத்தி வருகிறார். 1800 425 8055 என்ற டோல்ஃப்ரீ எண்ணை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்.

துடிப்புமிக்க இளைஞரான வி.செந்தில்குமாரின் சத்யம் பயோ நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக ஏராளமான விருதுகள் கிடைத்துள்ளன. மதுரைவாழ் தமிழனின் இயற்கை உர தயாரிப்புகளை பற்றி வெளிநாட்டினரும் கூட ஆர்வமாக விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் நடந்து வரும் சர்வதேச வேளாண்மை வர்த்தக கண்காட்சியில் சத்யம் பயோ குழுமத்தின் தயாரிப்பு உரங்களும் தவறாமல் இடம்பெற்று வருவதுடன், கண்காட்சியில் பங்கேற்கும் சர்வதேச நாடுகளின் வேளாண் நிபுணர்களின் பாராட்டுகளையும் குவித்து வருவதோடு பாரதத்தின் பெருமையையும் பறைசாற்றி வருகிறது. வி.செந்தில்குமார் போன்ற இளைஞர்களால் இந்தியாவில் விவசாயமும், விவசாயிகளும் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

தன்னுடைய மிகப்பெரிய கனவான F3 ஆர்கானிக் மார்க்கெட் மூலம் பல்லாயிரம் கிராமிய தொழில் முனைவோரை உருவாக்கி இயற்கை விவசாயத்தின் மீது புதிய நம்பிக்கை அளித்து வருகிறார். புதிய நம்பிக்கை பெற்று F3 ஆர்கானிக் மார்க்கெட்டில் இணைய... 7550875508 

Comments

  1. ஒவ்வொரு உயிரும் உயிர்வாழ உணவு தேவை,அவை இயற்கை யாகவே கிடைத்த காலம் மாறி,இன்று ரசாயனத்தின் பிடியில் விவசாயிகள் சிக்கி பொருளாதாரம் இழந்து,அதனால் நோய் வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.அன்றைய தினம் அரிசி சாதம் சாப்பிட்டவர் பணக்கார்கள் என்றும்,கூல் சாப்பிட்டவர்கள் ஏழை என்றும் கருதப்பட்டனர்.ஆனால் இன்று ரசயனத்தின்தின் பிடியில் அரிசி சோறு சாப்பிடுபவர்கள் அதிகம்.ஆனால் ரசாயணத்தால்,சிக்கிய விவசாயிகளை இயற்கை வழியில் முன்னேற்றம்.அடைய அயராது உழைக்கும் செந்தில்குமார் அவர்களுக்கும் பாராட்டுகள் வாழ்க பல்லாண்டு உங்களால் விவசாயிகள் முன்னேற்றம். காண உங்கள் வழியில் தஞ்சாவூர் மா.கோபுராஜ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!