கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான வராலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தல வரலாறு!
கண்கவரும் 16 வண்ணப்படங்கள்... சுவையான வரலாற்றுத்தகவல்களுடன் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்கு ன் றம் முருகன் கோயில் தல வரலாறு! மதுரை சத்யம் பயோ நிறுவன நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் காணிக்கையாக வழங்கினார்!! மதுரை, அக்.21 - தமிழ்க்கடவுளான அருள்மிகு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் தலவரலாறு மதுரை சத்யம் பயோ நிறுவனத்தால் திருத்தப்பட்ட புதிய பதிப்பாக வெளியிடப்பட்டு திருக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. இந்த நூலினை திருக்கோயில் நிர்வாக அலுவலர்கள் மணிமாறன், புகழேந்தி, கார்த்திக், மணிகண்டன் பட்டர் உள்ளிட்டோரிடம் சத்யம் பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் வழங்கினார். திருக்கோயில் சார்பில் சத்யம் பயோ நிறுவனருக்கு முருகப்பெருமானின் அருள்பிரசாதம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது. தலவரலாறு நூலில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்... இத்தல வரலாறு புத்தகம் மொத்தம் 88 பக்கங்களை உள்ளடக்கியது. இந்த புத்தகத்தில் ...