மதுரை பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நல உதவிகள்!
மதுரை பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில்பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நல உதவிகள்
சத்யம் பயோ நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார்
வழங்கினர்!!
மதுரை, அக்.19-
மதுரை பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல்
அறக்கட்டளை சார்பில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நல உதவிகள் வழங்கும்
விழா மதுரை புட்டுத்தோப்பு மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
பாரதி கல்வி
மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் தலைவர்
எம்.குருசாமி தலைமை வகித்தார். நிலா சேவை மைய அறக்கட்டளையின் கவிக்குயில் இரா.கணேசன்
வரவேற்புரை ஆற்றினார். மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் ஆ.மணிவண்ணன், மதுரை சத்யம்
பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் ஆகியோர் 50க்கும்
மேற்பட்ட பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், அரிசி, இனிப்பு உள்ளிட்ட
தீபாவளி நல உதவிகளை வழங்கினர். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
அதிக மதிப்பெண் பெற்ற 25 மாணவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
விழாவில்
மதுரை சத்யம் பயோ குழுமத்தின்
செயல் இயக்குனர் திருமதி.சத்யப்ரியா செந்தில்குமார், கிளாசிக் இன்ஜினியரிங் கம்பெனி இயக்குனர் ஆர். செல்வக்குமார்,
பொள்ளாச்சி பி.கே.வி. சேம்பர் இயக்குனர் கே.ஏ.பாலு, மங்கையர்கரசி மேல்நிலைப்பள்ளித்
தாளாளர் பி.புருஷோத்தமன், காரைக்குடி ஆர்.எம்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பி.ராமமூர்த்தி,
மதுரை மகாலட்சுமி நோட் புக் கம்பெனி பி.கருப்பையா, மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழக்கறிஞர் க.மு.திருப்பதி
ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை செயல் அலுவலர்
ஜி.பாலாஜி நன்றி கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை
பாரதி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையை எம்.குருசாமி நடத்தி வருகிறார். இயன்றதை
செய்வோம் இல்லாதவர்க்கே, ஏழை, எளியோரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கோடு ஆண்டுதோறும் மதுரை சத்யம்பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக
இயக்குனருமான வி.செந்தில்குமார் அரிசி மற்றும் இனிப்புகளை வழங்கி வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment