உயிர்கொடுக்கும் சத்யம் பயோவின் ‘யூஸ் இட்’



வறட்சியை தாக்குப்பிடித்து தென்னைக்கு
உயிர்கொடுக்கும் சத்யம் பயோவின் ‘யூஸ் இட்’
பொள்ளாச்சி விவசாயிகள் வாங்கி பயன்பெற ஆர்வம்!!

பொள்ளாச்சி, அக்.09-
வறட்சியைத் தாக்குப்பிடித்து பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை தொய்வின்றி வழங்கும் சத்யம் பயோ நிறுவனத்தின் புதுமையான தயாரிப்பான ‘யூஸ் இட்’ பயன் குறித்து பொள்ளாச்சி பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் விசாரித்தனர்.

பொள்ளாச்சி பகுதியில் தேவனூர் புதூர், ஆனைமலை மெயின்ரோட்டில் சத்யம் பயோ நிறுவனத்தின் F3 ஆர்கானிக் மார்க்கெட் ஆர்.பி.ஏஜென்சியால் நடத்தப்படுகிறது. இம் மையத்தின் அருகில் சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள், உணவுப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது.

இப்பகுதி தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெறும் பகுதி என்பதால், நூற்றுக்கணக்கான தென்னை விவசாயிகள் ஆர்வமுடன் திரண்டு வந்து சக்தி இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்து கேட்டறிந்தனர்.

பெரும்பாலான விவசாயிகள் தென்னையைப் பாதிக்கின்ற பூச்சித்தாக்குதல் குறித்தும், வறட்சியான காலங்களில் தென்னைக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் பட்டுப்போவது குறித்தும் கவலை தெரிவித்தனர்.

பூச்சித்தாக்குதலை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறிய சத்யம் பயோ நிறுவனத்தின் களப்பணியாளர்கள் லோகு விநாயகம், அருள் அங்குராஜ், செய்தி, மக்கள் தொடர்பாளர் தியாகராஜன் ஆகியோர் வறட்சியைத் தாக்குப்பிடித்து தென்னை மரங்களுக்கு தேவையான தண்ணீரை தன்னகத்தே சேமித்து, தொய்வின்றி வழங்கும் சத்யம் பயோ நிறுவனத்தின் புதுமையான கண்டுபிடிப்பான ‘யூஸ் இட்’ -ன் பயன்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.

இதன் பயன்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்த விவசாயிகள் பலரும் தங்கள் தென்னந்தோப்புகளுக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்து தேவையான அளவு உரங்கள் மற்றும் 'யூஸ் இட்'-ஐ பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

சக்தி ‘யூஸ்-இட்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...
சக்தி 'யூஸ் -இட்'

HYDROPHILIC/WATER RETENTION ADDITIVE
சக்தி 'யூஸ் இட்' தண்ணீரை தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொள்ளக்கூடிய பாலிமர் ஜெல்லி என்று அழைக்கப்படும். வறண்ட மற்றும் நீர் பற்றாக்குறையினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு ஓர் அற்புதமான உயரிய படைப்பாகும். சக்தி யூஸ் இட்  தன் எடையிலிருந்து 400 DM மட்டும் தண்ணீரை சேமிக்கக் கூடிய அதிசயப் பொருள்.
            சக்தி 'யூஸ் இட்' -ஐ மண்ணில் கலக்கும்போது நீர் தேக்கியாகப் பணியாற்றுகிறது. இதன் மூலம் பயிர்களுக்குத் தேவையான நீர் மற்றும் நுண்ணூட்டச்சத்துகளை தக்கவைத்து பயிர்களுக்கு கொண்டு செல்கிறது.
            சக்தி 'யூஸ் இட்' உறிஞ்சப்பட்ட தண்ணீர் மற்றும் அதிகப்படியான சத்துக்களைப் பயிர்களுக்கு அளிப்பதன் மூலம் மீண்டும் சத்துக்களை உறிஞ்சி வெளியிடும். மறு சுழற்சியாகச் செயல்படுகிறது.
உட்பொருட்கள்:
நீர் விரும்பி, நீர்த்தேக்க மூலக்கூறுகள்.
பயன்கள்:
• சக்தி 'யூஸ் இட் ' உபயோகிப்பதன் மூலம் பல வருடங்களுக்கு நீரினை தக்கவைத்துக் கொள்ளலாம். சத்துக்களை முழுமையாக பயன்படுத்திடவும் சக்தி 'யூஸ் இட்' உதவுகிறது.
• பயிர்களுக்கு நீரின் தேவையை 50% வரை குறைக்கிறது.
• நீர் ஆவியாவதை தடுக்கிறது.
• மண்ணின் கட்டமைப்பு நிலை நிறுத்தப்பட்டு காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
• தாவரங்களின் வேர் பகுதிகளின் சத்துக்களை பாதுகாத்து, உகந்த நேரத்தில் பயிர்களுக்கு அளிக்கவும் பயன்படுகிறது.
• நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் மாசுபடுதலையும் குறைக்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
• சக்தி 'யூஸ் இட்' மண்ணில் பயன்படுத்துவதன் மூலம் 5 வருடங்கள் வரை பாதுகாக்கப்படுகிறது.
• வேர் பகுதியிலும், மரங்களுக்கு அருகிலும், நீர் பாய்ச்சும்போதும், மண்ணுடன் கலந்து விடவும். மற்ற உரங்களுடனும் பயன்படுத்தலாம்.
100% நீரில் கரையத்தக்கது.
பரிந்துரை:
• ஒரு ஏக்கருக்கு 2 கிலோவினை பரவலாகப் பயன்படுத்தவும்.
தென்னை, மா, வாழை போன்ற நீண்ட நாள் பயிர்களுக்கு அளவுகள் மாறுபடும்.
-------------
1 கிலோ
அளவில் கிடைக்கும்.
-------------
HELP LINE : 1800 425 8055

Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!