பொள்ளாச்சி ‘அக்ரி ஷோ’வில் சத்யம் பயோ இயற்கை உர கண்காட்சி!
பொள்ளாச்சி
‘அக்ரி ஷோ’வில்
சத்யம்
பயோ இயற்கை உர கண்காட்சி!
பொள்ளாச்சி, அக்.11-
பொள்ளாச்சி&பாலக்காடு மெயின் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண
மண்டபத்தில் 11, 12, 13 ஆகிய நாட்களில் அக்ரி ஷோ நடந்து வருகிறது.
இக்கண்காட்சியின் 8ஏ அரங்கில் மதுரை சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் கண்காட்சி
மற்றும் விற்பனை நடந்து வருகிறது.
கண்காட்சிக்கு வரும் விவசாயபெருமக்கள் சக்தி இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்தும்,
பயன்கள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தனர். சக்தி இயற்கை உரங்களை தொடர்ந்து பயன்படுத்தி,
இருமடங்கு லாபத்துடன் பயன் அடைந்து வரும் விவசாயப் பெருமக்கள், புதிய தயாரிப்புகள்
குறித்து ஆர்வமாக விசாரித்தனர். பெரும்பாலான விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கு
நேரில் வந்து ஆய்வு செய்து தேவையான உரங்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களிலும் நடக்கும் இந்த வேளாண் கண்காட்சி பொள்ளாச்சி
மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
என்று கருதப்படுகிறது.
Good experience after visit
ReplyDelete