பசுமை நிறைந்த வயல்வெளிகள்...
பூத்துக்குலுங்கும் பசுஞ்சோலைக்கு மத்தியில்
40 ஏக்கர் புதிய வளாகத்தில் செயல்பட தொடங்கியது
சத்யம் பயோவின் மதுரை வேளாண்மை அறிவியல் கல்லூரி!
சிவானந்தா சேவாஸ்ரமம் சுவாமிகள் ஸ்வரூபானந்தா அருளாசி!!




மதுரை, அக்.10-

பசுமை நிறைந்த வயல்வெளிகள், பூத்துக்குலுங்குகின்ற பசுஞ்சோலைகளுக்கு மத்தியில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புதிய வளாகத்தில் செயல்பட தொடங்கியது சத்யம் பயோவின் ஒரு அங்கமான மதுரை வேளாண்மை அறிவியல் கல்லூரி.

உலகத்தரம் வாய்ந்த இயற்கை உரம் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மதுரை சத்யம் பயோ நிறுவனம் சார்ந்த சத்யம் பயோ குழுமத்தின் ஒரு அங்கமாக திகழ்வது மதுரை வேளாண்மை அறிவியல் கல்லூரி. (Institute of Agriculture Research Institute). 


இக்கல்லூரி ஏற்கனவே செயல்பட்டு வந்த திருநகர் 5-வது ஸ்டாப், சீனிவாசாநகர் 9-வது தெரு வளாகத்திலிருந்து, தற்போது 40  ஏக்கர் பரப்பளவில் பசுமை நிறைந்த வயல்வெளிகளும், பசுமையான சோலைகளுமாக பூத்துக்குலுங்குகின்ற மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அருகில், ஆஸ்டின்பட்டி மெயின் ரோட்டில், 21/7 என்ற இலக்கத்தில் அமைந்துள்ள சிவானந்தா சேவாஸ்ரமம் வளாகத்தில் செயல்படத் தொடங்கி உள்ளது.

புதிய வளாகத்தில் கல்லூரியின் தொடக்கவிழாவுக்கு சத்யம் பயோ குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு.வி.செந்தில்குமார் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் தாளாளர் திருமதி.வி.சத்யப்ரியா செந்தில்குமார் அவர்கள் குத்துவிளக்கேற்றினார். சிவானந்தா சேவாஸ்ரமத்தின் தலைவர் ஸ்வரூபானந்தா சுவாமிகள் புதிய கல்லூரி வளாகத்தை திறந்து வைத்து அருளாசி வழங்கினார். சிவானந்தா சேவாஸ்ரமத்தின் உப தலைவர் ராமன்ஜி அவர்கள் கல்லூரியின் விடுதி வளாகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் திரு.வி.கணேஷ்ராஜா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

ஸ்வரூபானந்தா சுவாமிகள் தனது அருளாசியில், சோலைவனமாக திகழும் சிவானந்தா சேவாஸ்ரம வளாகத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரி செயல்படத் தொடங்கியிருப்பதன் மூலம் மிகச்சிறந்த சோலைவனமாக இவ்வளாகம் மாறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
சத்யம் குழுமத்தின் தலைவர் திரு.வி.செந்தில்குமார் அவர்கள் தனது சிறப்புரையில், வேளாண் அறிவியலும், வேளாண் கல்வியும் இன்றைக்கு நாட்டின் அவசியத்தேவையாகும். இது போன்றதொரு கல்லூரி துவங்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. இக்கல்லூரி மென்மேலும் வளர அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், உயர் தொழில் நுட்ப வசதிகளையும் செய்து தருவதோடு, நாட்டின் மிகச்சிறந்த வேளாண் கல்லூரிகளுள் ஒன்றாக நமது கல்லூரியை முன்னெடுத்து செல்வோம் என்றார்.


வேளாண்மை அறிவியல் கல்லூரியின் தாளாளர் திருமதி.வி.சத்யப்ரியா செந்தில்குமார் அவர்கள் பேசும்போது, நாட்டின் தேவையறிந்து வேளாண் கல்வி பயில வந்திருக்கும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.கணேஷ்ராஜா அவர்கள் பேசும்போது, குழந்தையாக என்னிடம் தரப்பட்டுள்ள இக்கல்லூரியை மிகச்சிறந்த முறையில் வளர்த்து ஆளாக்குவதை லட்சியமாக கொண்டிருக்கிறேன் என்றார்.
விழாவில் சிவானந்தா சேவாஸ்ரம பாடசாலையின் தலைமை ஆசிரியை திருமதி. பாரதி, கல்லூரியின் பேராசிரியர் அனீஷ், உதவி பேராசிரியர்கள் சங்கீதா, விஜய்குமார், கிருபாகரன், வாணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இக்கல்லூரி வளாகத்தில் இயற்கை விவசாய கூடங்கள், தேனீ, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி கூடங்கள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரியின் மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு...
0452-2482425 / 2482426. அலைபேசி-82482 56463 / 75025 11166 / 90957 26507 / 99409 48400

Comments

  1. வீட்டுக்கொரு டாக்டர், என்ஜினியர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களை உருவாக்குவோம் என்பதை போல வீட்டுக்கொரு வேளாண் விஞ்ஞானிகளையும் உருவாக்குவோம் என்ற புதிய நம்பிக்கையோடு வேளாண்மை அறிவியல் கல்லூரியை நடத்தி வரும் சத்யம் பயோ குழுமத்துக்கும், ஆர்வத்தோடு விவசாயம் படிக்க வந்திருக்கும் இந்தியாவின் எதிர்கால தூண்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. You are trying to straighten the bended backbone (agri.) of our Bharath Matha May God be always with you in each and every task and lead you in a successful path

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!