விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி சந்தையில் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்! மதுரை, செப்.25 - மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடந்த கால்நடை சந்தையில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் , சக்தி இயற்கை கால்நடை தீவனம் விவசாயிகளின் பெரும் வரவேற்பை பெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று காய்கறி, மலர், கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரம் நடைபெற்ற சந்தையில் சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி இயற்கை தீவனம் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. இச்சந்தையில் நூற்றுக்கணக்கான விவசாயிகளும், மலர் வணிகர்களும், கால்நடை வளர்ப்போரும் கலந்து கொண்டனர். கால்நடை சந்தையில் நாட்டு மாடுகள், பொலி காளைகள், காங்கேயம் காளைகள், நாட்டின பசுக்கள், ஜெர்ஸி மாடுகள் உள்பட அனைத்து ரக காளைகளும் பங்கேற்றன. இச்சந்தையில் பங்கேற்ற விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் சக்தி இயற்கை உரங்கள் மற்றும் சக்தி கால்நடை தீவனத்தின் பயன்களை ஆர்வமுடன் கேட்டு, வாங்கிச்சென்ற...