F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் சக்தி இயற்கை தீவனத்துக்கு அமோக வரவேற்பு!!!
காங்கேயம் அருகே பழைய கோட்டை
கால்நடை சந்தையில்
F3 ஆர்கானிக் மார்க்கெட்டின்
சக்தி இயற்கை தீவனத்துக்கு
அமோக வரவேற்பு!!!
காளைகள் வளர்ப்போர் ஆர்வமுடன்
வாங்கிச்சென்றனர்!!
ஈரோடு, செப்.16-
ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பழைய கோட்டை என்ற இடத்தில் காளைகளுக்கான கால்நடை
சந்தை நடைபெற்றது. இதில் மதுரை சத்யம் பயோ குழுமத்தின் F3 ஆர்கானிக்
மார்க்கெட்டின் தயாரிப்பான சக்தி இயற்கை கால்நடை தீவனத்தின் கண்காட்சி அரங்கு இடம் பெற்றது. இச்சந்தையில் நூற்றுக்கும் மேற்பட்ட
காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. ஐநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
காங்கேயம் காளைகள், பூச்சிக்காளைகள், பொலிகாளைகள், கூட்டுமாடுகள், வில்வண்டி காளைகள்
உள்ளிட்ட பல ரக காளைகள் இடம்பெற்றன.
சக்தி இயற்கை கால்நடை தீவனத்தின் பயன்பாட்டினை
காளைகள் வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் சத்யம் பயோ நிறுவனத்தின் முதுநிலை வணிக
மேலாளர் வேல்முருகன், மக்கள் தொடர்பு அலுவலர்
தியாகராஜன் ஆகியோர் விரிவாக எடுத்துக் கூறினர். 23 சத்து மிகுந்த இயற்கை மூலப்பொருட்களை
கொண்டு தயாரிக்கப்படும் சக்தி இயற்கை தீவனங்கள் கால்நடைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருக்கிறது. ஒரு லிட்டர் பாலுக்கு 400 கிராம் என்ற அளவில் பிற தீவனங்களுடன்
சக்தி இயற்கை தீவனத்தை வழங்கினாலே போதுமானது. இதன் தயாரிப்பில் கடல் பாசி சாறுகள் முக்கியமான
இடம் பிடிப்பதால் கால்நடைகளின் கழிவுகளில் மீத்தேன் வாயு உற்பத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது என்ற தெரிவித்தனர். சக்தி இயற்கை
தீவனத்தின் பயன்களை நேரில் கேட்டறிந்த காளைகள் வளர்ப்போரும், இதர கால்நடைகள் வளர்க்கும்
விவசாயிகளும் சக்தி இயற்கை
தீவனத்தை ஆர்வமுடன் வாங்கிச்சென்றனர்.
நிகழ்ச்சியில் கால்நடை சித்த மருத்துவர் புண்ணியமூர்த்தியின் சிறப்புரை இடம் பெற்றது.
சக்தி இயற்கை கால்நடை தீவனம் பற்றி...
இயற்கை உரம் தயாரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த சத்யம் பயோ நிறுவனம்
மதுரையை தலைமையிடமாக கொண்டு, அதன் நிறுவனரும்,
நிர்வாக இயக்குனருமான திரு.வி.செந்தில்குமார் அவர்களின் உயரிய வழிகாட்டுதலின்படி
நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. சத்யம்பயோ
நிறுவனத்தின் ஒரு அங்கமாக செயல்படும் F3 ஆர்கானிக்
மார்க்கெட் இயற்கை உரம், இயற்கை கால்நடை தீவனம், இயற்கை உணவு ஆகியவற்றை சந்தைப்படுத்துதலில்
முன்னிலை வகிக்கிறது. விவசாய பெருமக்களுக்கு தரமான இயற்கை உரங்களும், கால்நடை தீவனங்களும்,
இயற்கை உணவுகளும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு மாநிலம் முழுவதும் நடக்கின்ற
வேளாண் சந்தைகள், விவசாய பெருமக்கள் கூடுகின்ற கருத்தரங்குகள், வேளாண் கண்காட்சிகள்
போன்றவற்றில் F3 ஆர்கானிக்
மார்க்கெட்டின் அரங்குகள் தவறாமல் இடம்பெறுகின்றன.
சக்தி இயற்கை கால்நடை தீவனங்கள் ஸீ
- ப்ரோ, ஸீ - வீட் என்ற
பெயர்களில் தலைசிறந்த கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை ஊட்டச்சத்து நிபுணர்களின்
வழிகாட்டுதல்படி சத்துமிகுந்த 23 மூலப்பொருட்களை கொண்டு அதிநவீன தொழில்நுட்ப முறைப்படி
தயாரிக்கப்படுகிறது. சக்தி இயற்கை கால்நடை தீவனங்கள் காளைகள் மற்றும் பசுக்கள் நோயின்றி
ஆரோக்கியமாகவும், சத்தாகவும், வலுவாகவும் இருக்க ஊட்டச்சத்துக்கள் மிகுந்த தீவனமாக
வழங்கப்படுகிறது. இதை உண்ணும் கால்நடைகள் சுறுசுறுப்பாகவும், திடகாத்திரமாகவும் இருக்கின்றன.
இளம் கன்றுகளின் வளர்ச்சிக்கும், ஆற்றலுக்கும், வலுத்தன்மைக்கும் உறுதுணையாக இருக்கிறது.
இதன் முக்கிய மூலப்பொருட்களில் கடல்பாசி சாறுகள் முக்கிய அங்கம் வகிப்பதால் பசுக்களின்
பால் சுரக்கும் தன்மையை இயல்பாகவே தூண்டிவிடுகிறது. வழக்கத்தை விடவும் அதிக அளவிலான
பாலினை சுரக்க செய்கிறது. பாலின் சுவையையும் அதிகப்படுத்தி தருகிறது. பாலின் கொழுப்புத்தன்மையையும்
அதிகரிக்க செய்கிறது. சக்தி இயற்கை கால்நடை
தீவனங்களை உண்ணும் பசுக்கள், காளைகள் போடுகின்ற சாணமும், கோமியமும் சத்து மிகுந்த இயற்கை
உரங்களாக மண்ணுக்கு கிடைக்கின்றன.
சக்தி இயற்கை தீவனம் மற்றும் F3 ஆர்கானிக்
மார்க்கெட் பிரான்சைஸி
தொடர்புக்கு... +91 75508 75508.
மனிதனின் உணவிலேயே இரசாயனங்கள் பெருகி விட்ட இன்றைய கால கட்டத்தில் மனிதர்களுக்கும், விவசாயத்துக்கும் உறுதுணையாக இருக்கின்ற காளைகளுக்காக இயற்கை தீவனம் என்பது பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ப்ரோ!