மதுரை மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க கண்காட்சி



மதுரை மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்க  கண்காட்சியில்
பார்வையாளர்களை கவர்ந்த சத்யம் கிஸான் கேர்-ன் ‘ஜலசக்தி’
வறட்சியிலிருந்து விவசாயிகளை காப்பாற்றும் பாதுகாவலன்!!

மதுரை, செப்.14&

மதுரை மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்கத்தின் 35-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் கோமதிபுரம் இராஜபிரபா மகாலில் நடந்தது. நிகழ்ச்சியில் சங்கத்தின்  மாநில  தலைவர் திரு.மோகன் அவர்கள், செயலாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள், சங்கத்தின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


நிகழ்ச்சியை முன்னிட்டு விவசாய இடுபொருட்களின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் சத்யம் கிஸான் கேர் - ஸ்ரீசமுத்ரா இயற்கை உரம் நிறுவன அரங்கில்  நவீன தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்களான ப்ளூமர், ஈல்டர், பிளாக் டைமண்ட், பயோ காம்ப்ளக்ஸ், அல்ஜினிக் - ஜி, டோரா- என், ஜிங்க் - ஓ, பயோஜைம் ஜெல், ஆல்பா அமினோ, கிஸான் கிங், நியூட்ரி 6, லியோ - எல், சூப்பர் ஹியூமிக், பிளாக் பியர்ல், ஆன் டூட்டி, வஜ்ரா, பான் அவுட் உள்ளிட்ட தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.


சத்யம் கிஸான் கேர்-இன் புதுமை படைப்பான ஜலசக்தி பார்வையாளர்களையும், விவசாயிகளையும் வெகுவாக கவர்ந்தது. ஜலசக்தியானது வறட்சி காலங்களில் பயிர்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்து அதனை காப்பாற்றும் பாதுகாவலனாகத் திகழ்கிறது. துகள் வடிவில் உள்ள ஜலசக்தியை மண்ணில் தூவும் போது அது மண்ணுக்குள் சென்று ஜெல் ஆக உருமாறி பயிர்களுக்கு தேவையான நீர் போக, எஞ்சிய நீரை தன்னகத்தே சேமித்து வைத்துக்கொள்கிறது. வறட்சியான காலங்களில் ஜலசக்தி சேமித்து வைத்த நீரானது பயிர்களுக்கு சீராக கிடைப்பதால் பயிர்கள் அழிவிலிருந்து காக்கப்படுகிறது. இன்றைய காலச்சூழலுக்கு ஏற்ப சத்யம் கிஸான் கேர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள ஜலசக்தியின் பயன்பாடு குறித்த செயல் விளக்கத்தை கண்காட்சிக்கு வந்திருந்த விவசாயிகளும், பார்வையாளர்களும், ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். சத்யம் கிஸான் கேர் இயற்கை உரங்களின் பயன்பாட்டினை வர்த்தக தலைவர் திரு. இப்ராஹிம் கான் அவர்கள் பார்வையாளர்களுக்கு விளக்கி கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட சத்யம் குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு. வி.செந்தில்குமார் அவர்களை விழாக்குழுவினர் கௌரவித்தனர்.



Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!