வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம்.
வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாட்டைக் குறைப்போம்; நோயற்று வாழ்வோம். சீனித் துளசி சாகுபடி! உ லகத்தில் மக்கள் தொகை பெருகுவதைப் போல நோய்களும் பெருகிக் கொண்டே உள்ளன. இவற்றுக்கான தீர்வுக்காக ஆங்கில மருந்து மாத்திரைகளைச் சாப்பிடும் போது பக்க விளைவுகள் உண்டாகின்றன. அதனால், மக்களின் பார்வை இப்போது மூலிகை மருத்துவத்தின் பக்கம் திரும்பியுள்ளது. மூலிகைகள் பட்டியலில் முக்கியமானது துளசி. அந்த இனத்தைச் சார்ந்தது இனிப்புச் சுவையுள்ள சீனித் துளசி. இதை ஆங்கிலத்தில் ஸ்டீவியா ரியோடியானா என அழைப்பார்கள். சீனித் துளசியின் தாயகம் தென்னமெரிக்கா. இது பராகுவேயில் மிகுதியாக உள்ளது. சீனித் துளசி இலையிலுள்ள ஸ்டீவியோசடு 3-10x, ரெபடையோசடு 13x ஆகிய வேதிப் பொருள்கள் தான் இதன் இனிப்புக்குக் காரணம். ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனித் துளசி கூடுதலாகப் பயிராகிறது. இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் ஏற்றுமதியில் சீனம் முதலிடம் வகிக்கிறது. சீனித் துளசிச் செடி 10-15 செ.மீ. உயரம் வரை வளரும். சிவப்பு வண்டல் நிலத்தில் நன்கு வளரும். கார அமிலத் தன்மை 6...