சத்யம் தொழிற்குழுமத்தின் வேளாண் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
சத்யம் தொழிற்குழுமத்தின் வேளாண் அறிவியல்
கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்!
சிவானந்தா சேவாஸ்ரமம் சுவாமிகள் ஸ்வரூபானந்தா ஆசியுரை வழங்கினார்-
கல்லூரி தாளாளர் திருமதி. வி.சத்யப்ரியா செந்தில்குமார் பரிசுகள்
வழங்கினார்!!
மதுரை, ஜன.11-
சத்யம் தொழிற்குழுமத்தின் ஒரு அங்கமான வேளாண் அறிவியல்&ஆராய்ச்சி
(ஐ.ஏ.ஆர்.எஸ்.) கல்லூரியில் உழவர் பெருமக்களை போற்றும் வகையில் பொங்கல் திருநாள்
கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்தன.
உலகெங்கிலும் பரவி வாழும் ஒப்பற்ற தமிழர்களின் தனிப்பெருந்திருவிழா என்பதால்
அதனை சிறப்பிக்கின்ற வகையில் கல்லூரியின் பேராசிரியப்பெருமக்களும், மாணவ, மாணவியரும்
தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்தும், சேலை உடுத்தியும் கலாச்சாரத்தை
போற்றும் வகையில் பங்கேற்றனர்.
பொங்கல் திருநாளுடன், சுவாமி விவேகானந்தரின் 157&வது பிறந்த நாள் விழாவும்,
கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையின் பொன் (50&ம் ஆண்டு) விழாவும்
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பாத்திமா கல்லூரியின் முன்னாள் துறை தலைவர் டாக்டர் திருமதி. கீதா
தலைமை வகித்தார். விவேகானந்தா கேந்திரம் வி.கே.சுமித்ரா முன்னிலை வகித்தார். கல்லூரியின்
தாளாளர் திருமதி வி.சத்யப்ரியா செந்தில்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார். கல்லூரி
முதல்வர் டாக்டர் கணேஷ்ராஜா வரவேற்புரையாற்றினார்.
சிவானந்தா சேவாஸ்ரமம் சுவாமிகள் தவப்பெருந்திரு ஸ்வரூபானந்தா அவர்கள் ஆசியுரை
வழங்கினார். அவர் கூறும்போது, இன்றைய இளைஞர்கள் விவேகானந்தர் வழியை பின்பற்ற வேண்டும்.
நம் இந்திய திருநாடு ஆன்மீக பூமியாக திகழ்கிறது. இருப்பினும் அனைத்து மக்களும்
ஒற்றுமையாக வாழ்கின்ற சமதர்ம பூமியாகத் திகழ்கிறது, விவேகானந்தரின் வழியில் ஒரே பாரதம்,
வெற்றி பாரதமாகத் திகழ்கிறது என்றார்.
விழாவில் மாணவிகள் அனைவரும் வண்ண கோலங்களிட்டு, செங்கரும்புக்கு நடுவே தமிழர்
பாரம்பரியப்படி மண்பானையில் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டும், குலவையிட்டும்
மகிழ்ந்தனர்.
தொடர்ந்து மாணவ, மாணவியரும், பேராசிரியர்களும் பங்கேற்ற தமிழர் திருநாள் கலைநிகழ்ச்சிகளும்,
பல்வேறு விளையாட்டுப்போட்டிகளும் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி தாளாளர் திருமதி.
வி.சத்யப்ரியா செந்தில்குமார் அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.உலகுக்கே உணவளிக்கும் உழவர் பெருமக்களை போற்றும் வகையில்
ஆண்டுதோறும் தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள், உழவர் திருநாள் கொண்டாட்டங்களாக தொடர்ந்து
நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment