Posts

சத்யம் பயோ குழுமத்தின் ஆய்வுக்கூட்டம்

Image
சத்யம் பயோ குழுமத்தின் முதுநிலை மேலாளர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மதுரை எல்லீஸ் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான திரு.வி.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடந்தது. நிறுவனத்தின் செயல் இயக்குனர் திருமதி.எஸ்.சத்யப்ரியா செந்தில்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சத்யம் கிஸான் கேர் பி2சி மண்டல மேலாளர் திரு.விஜயராஜன், வணிகதலைவர் திரு. இப்ராகிம்கான் ஆகியோர் தலைமையிலான அணி சுழல்கோப்பையை வென்றது. சுழற்கோப்பை மற்றும் ரொக்கப்பரிசினை திரு.விஜயராஜனிடம் வழங்கி நிர்வாக இயக்குனர் திரு.செந்தில்குமார் அவர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டினையும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஆலோசகர் ராஜ்சாணக்யா மற்றும் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.  

மதுரை சத்யம் பயோ குழுமத்தின் மாதாந்திர விற்பனை அதிகாரிகள், கள அதிகாரிகள், மண்டல மேலாளர்கள் ஆய்வுக்கூட்டம்

Image
மதுரை சத்யம் பயோ குழுமத்தின் மாதாந்திர விற்பனை அதிகாரிகள், கள அதிகாரிகள், மண்டல மேலாளர்கள்  ஆய்வுக்கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வணிக தலைவர் வெங்கட் ரமணா நெல்லுட்லா தலைமை வகித்தார். மனிதவள வளர்ச்சி அலுவலர் ஹெச்.ஈனோக் தியாகராஜ் வரவேற்புரையாற்றினார். சத்யம் பயோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் அவர்கள் நிறுவன வளர்ச்சி மற்றும் செயல்பாடு, வணிக மேம்பாடு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார். அவர் தனது உரையில், இன்றைய விவசாயத்துக்கு இயற்கை உரம் என்பது அத்தியாவசியத் தேவையாக மாறி வருகிறது.  எனவே விவசாய பெருமக்களிடமும், பொதுமக்களிடமும் இயற்கை உரம் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை முழுஅளவில் கொண்டு செல்ல வேண்டும். இதை வணிக நோக்கமாக மட்டுமல்லாமல் விவசாயத்துக்கு நாம் செய்கின்ற சேவையாகவும் கருதி செய்ய வேண்டும். பொள்ளாச்சி உள்ளிட்ட வேளாண்சார்ந்த பகுதிகளில் நமது நிறுவனத்தின் இயற்கை உரங்களை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயன்பெறுகின்ற வகையில் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் செயல்பட வேண்டும். அடுத்த ஓராண்டுக்குள் நம...

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

Image
இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு இப்போது மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி உள்ளிட்ட வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட வேளாண் பொருட்களை வாங்குவது குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் இயற்கை விவசாய விளை பொருட்களுக்கான தேவையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இயற்கை விவசாயம் என்பது வேதி இடுபொருட்கள் அல்லாமல் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களைச் சார்ந்ததாகும். அதனால் இயற்கை விவசாயம் பெருக, இயற்கையான இடுபொருட்கள் அவசியம். இந்த இடுபொருட்களைத் தயாரித்து வருபவர் வி. செந்தில்குமார். மதுரை அருகே விவசாயக் குடும்பத்தில் பிறந்த செந்தில்குமார், தங்களது நிலத்தில் பயன்படுத்திய வேதி உரங்களால் மண் வளம் கெட்டுப் போனதை அருகில் இருந்து பார்த்துள்ளார். அதனால் அதற்கு மாற்றாக இயற்கை வேளாண் வழிமுறைகளைத் தேடிப் பயணித்துள்ளார். நம்மாழ்வார் போன்ற வேளாண் அறிஞர்களின் கூட்டங்களில் கலந்துகொண்டுள்ளார். இறுதியில் தானே இயற்கை வேளாண்மைக்கான இடுபொருட்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளார். அதன்பட...

உலக தென்னை விழாவில் சத்யம் பயோ

Image
பொள்ளாச்சியில் நடந்த உலக தென்னை விழாவில்  சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் எப்.3 ஆர்கானிக் மார்க்கெட்  குறிப்பேட்டை   வெளியிட்டார்துணைசபாநாயகர் பொள்ளாச்சிஜெயராமன்! பொள்ளாச்சி, செப்.07 - பொள்ளாச்சியில் நடந்த உலக தென்னை விழாவில் சத்யம் பயோ நிறுவனத்தின் இயற்கை உர குறிப்பேட்டை வெளியிட்டார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனமும், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனமும் இணைந்து இன்று பொள்ளாச்சி பி.ஏ.தொழில் நுட்பக்கல்லூரியில் உலக தென்னை தினம் விழாவை நடத்தின. விழாவுக்கு தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத்தலைவர் டி.ஏ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் தலைவர் பி.கே.பத்மநாபன் விளக்க உரையாற்றினார். விழாவில் துணைசபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேரூரையாற்றினார். சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் எப்.3 ஆர்கானிக் மார்க்கெட்டின் குறிப்பேட்டை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ...

Sathyam Bio farmers meet in mannadi mangalam

Image
             ரசாயனம் இல்லாத, சத்தான உணவுப்பொருட்களை விளைவிக்க இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு  அனைத்து விவசாயிகளும் மாறவேண்டும்!                          சத்யம் பயோ நிறுவன விவசாயிகள் சந்திப்பில் வலியுறுத்தல்!! மதுரை, ஆக.21 ரசாயனம் கலக்காத, சத்தான உணவுப்பொருட்களை விளைவிக்க அனைத்து விவசாயிகளும் இயற்கை உரங்களின் பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்று சத்யம் பயோ இயற்கை உரத்தயாரிப்பு நிறுவனம் நடத்திய விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்து¬றையை அடுத்த மண்ணாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில், கர்னர் ஜான்பென்னி குயிக் விவசாயிகள் நற்பணி மன்றமும், கடல்பாசியிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதில் முன்னணி     நிறுவனமான மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரமும் இணைந்து விவசாயிகள் சந்திப்பு மற்றும் இயற்கை விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் மதுரை மாவட்டவிவசாய (கொடிக்கால்) சங...

உலக தென்னை தின திருவிழா

Image
தேனியில் நடந்த உலக தென்னை தின திருவிழாவில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., பங்கேற்பு! ‘விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவேன்’ என உறுதி!! தேனி, செப்.04 உலக தென்னை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 2&ந்தேதி உலகம் முழுவதும் விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. இதையட்டி  தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் கடந்த 2&ந்தேதி தேனியில் உள்ள தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திர நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் நடந்த 34 அமர்வுகளில் கலந்து கொண்டு, 27 அமர்வுகளில் கேள்வி எழுப்பினேன். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் நலன் சார்ந்த விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன்  என்றார். நாள் முழுக்க நடந்த விழாவில், தென்னை சாகுபடி தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் நோய்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், தென்னை சாகுபடிக்கு உதவுகின்ற புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடந்தது. செயல்முறை ...

மலேசியாவில் பசுமை விருது பெற்ற பசுமை தமிழன்

Image
மலேசியாவில் தமிழ் மண்ணுக்கு  பெருமை சேர்த்த மதுரை தமிழன்!  கடல்பாசி இயற்கை உரம் தயாரிப்பிற்காக உயரிய விருது!! மலேசியாவில் நடந்த தேசம் ஊடக சாதனையாளர் விருது 2018&2019 வழங்கும் விழாவில் மதுரை சத்யம் பயோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமாருக்கு சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.  மலேசியாவில் உள்ள தேசம் மீடியா நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் மலேசிய நாட்டில் உள்ள மகாசா பல்கலைகழகத்தில்    நடந்தது. விழாவில், மலேசியாவின் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கங்கை சுப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடற்பாசியிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பில் முன்னிலையில் விளங்கும் மதுரை சத்யம் பயோ குழுமத்...