உலக தென்னை விழாவில் சத்யம் பயோ
பொள்ளாச்சியில் நடந்த உலக தென்னை விழாவில்
சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் எப்.3 ஆர்கானிக் மார்க்கெட்
குறிப்பேட்டை வெளியிட்டார்துணைசபாநாயகர் பொள்ளாச்சிஜெயராமன்!
பொள்ளாச்சி, செப்.07-
பொள்ளாச்சியில் நடந்த உலக தென்னை விழாவில் சத்யம் பயோ நிறுவனத்தின்
இயற்கை உர குறிப்பேட்டை வெளியிட்டார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்.
கோயம்புத்தூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனமும், விநாயகா தென்னை
உற்பத்தியாளர் நிறுவனமும் இணைந்து இன்று பொள்ளாச்சி பி.ஏ.தொழில் நுட்பக்கல்லூரியில்
உலக தென்னை தினம் விழாவை நடத்தின. விழாவுக்கு தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கத்தலைவர்
டி.ஏ.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின்
நட்பமைப்பு தலைவர் ஆர்.ஏ.சக்திவேல் வரவேற்புரையாற்றினார். விநாயகா தென்னை உற்பத்தியாளர்
நிறுவனம் தலைவர் பி.கே.பத்மநாபன் விளக்க உரையாற்றினார். விழாவில் துணைசபாநாயகர் பொள்ளாச்சி
வி.ஜெயராமன் கலந்து கொண்டு பேரூரையாற்றினார். சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் எப்.3
ஆர்கானிக் மார்க்கெட்டின் குறிப்பேட்டை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள¢கயிறு
வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின்
நட்பமைப்பு ஆலோசகர் சி.மகேந்திரன் ஆகியோர்
வெளியிட விழா நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.
விழாவில் சத்யம்பயோ நிறுவனத்தின் வணிக தலைவர்கள் ஆர்.திருக்குமரன்,
எஸ்.கார்த்திகேயன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தியாகராஜன் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு
சத்யம் பயோ நிறுவனர் வி.செந்தில்குமார் சார்பாக நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Comments
Post a Comment