உலக தென்னை தின திருவிழா
தேனியில் நடந்த உலக தென்னை தினதிருவிழாவில் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., பங்கேற்பு!
‘விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவேன்’ என உறுதி!!
தேனி, செப்.04‘விவசாயிகளின் நலனுக்காக பாடுபடுவேன்’ என உறுதி!!
உலக தென்னை தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 2&ந்தேதி உலகம் முழுவதும் விவசாயிகளால் கொண்டாடப்படுகிறது. இதையட்டி தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் கடந்த 2&ந்தேதி தேனியில் உள்ள தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திர நாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் பேசும்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மொத்தம் நடந்த 34 அமர்வுகளில் கலந்து கொண்டு, 27 அமர்வுகளில் கேள்வி எழுப்பினேன். நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகள் நலன் சார்ந்த விசயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன் என்றார்.
நாள் முழுக்க நடந்த விழாவில், தென்னை சாகுபடி தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள், தென்னையை தாக்கும் நோய்களை எதிர்கொள்ளும் வழிமுறைகள், தென்னை சாகுபடிக்கு உதவுகின்ற புதுமையான கண்டுபிடிப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடந்தது. செயல்முறை விளக்கம் நேரடியாகவும், காணொலிக் காட்சி வாயிலாகவும் விளக்கப்பட்டது. விழாவில் தேனி மாவட்ட தென்னை விவசாயிகளும், தென்மாவட்டங்களைச் சேர்ந்த தென்னை விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தென்னை சாகுபடி குறித்து தெளிவு பெற்றனர்.
விழாவில் சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் கண்காட்சி அரங்கினை பார்வையிட்ட தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திர நாத், கடல் பாசியிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கும் தொழில் தொழில்நுட்பத்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மண் வளத்தை பாதுகாக்க நாடு முமுக்க உள்ள விவசாயிகள் இயற்கை உரங்களுக்கு முழுமையாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
விழாவில் பங்கேற்ற விவசாயிகள் அனைவருக்கும் சத்யம் பயோ நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் சார்பாக நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
gud
ReplyDelete