மதுரை சத்யம் பயோ குழுமத்தின் மாதாந்திர விற்பனை அதிகாரிகள், கள அதிகாரிகள், மண்டல மேலாளர்கள் ஆய்வுக்கூட்டம்






மதுரை சத்யம் பயோ குழுமத்தின் மாதாந்திர விற்பனை அதிகாரிகள், கள அதிகாரிகள், மண்டல மேலாளர்கள்  ஆய்வுக்கூட்டம் அதன் தலைமை அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வணிக தலைவர் வெங்கட் ரமணா நெல்லுட்லா தலைமை வகித்தார். மனிதவள வளர்ச்சி அலுவலர் ஹெச்.ஈனோக் தியாகராஜ் வரவேற்புரையாற்றினார்.



சத்யம் பயோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார் அவர்கள் நிறுவன வளர்ச்சி மற்றும் செயல்பாடு, வணிக மேம்பாடு தொடர்பாக ஆலோசனைகள் வழங்கினார். அவர் தனது உரையில், இன்றைய விவசாயத்துக்கு இயற்கை உரம் என்பது அத்தியாவசியத் தேவையாக மாறி வருகிறது. 

எனவே விவசாய பெருமக்களிடமும், பொதுமக்களிடமும் இயற்கை உரம் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை முழுஅளவில் கொண்டு செல்ல வேண்டும். இதை வணிக நோக்கமாக மட்டுமல்லாமல் விவசாயத்துக்கு நாம் செய்கின்ற சேவையாகவும் கருதி செய்ய வேண்டும். பொள்ளாச்சி உள்ளிட்ட வேளாண்சார்ந்த பகுதிகளில் நமது நிறுவனத்தின் இயற்கை உரங்களை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி பயன்பெறுகின்ற வகையில் உத்வேகத்துடனும், உற்சாகத்துடனும் செயல்பட வேண்டும்.

அடுத்த ஓராண்டுக்குள் நமது நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்துகின்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உங்கள் உழைப்பினை வழங்க வேண்டும். அடுத்த 3 மாதத்துக்குள் நமது சத்யம் பயோ நிறுவனத்தின் பெயர் இந்தியா முழுவதும் பரவிட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு நாம் அனைவரும் செயலாற்ற வேண்டும். தீபாவளி திருநாளுக்குள் அதிக விற்பனையை கொண்டு வரும் விற்பனை அதிகாரிகள், கள அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மதிப்புமிகு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன. இதனை அனைவரும் பெற வேண்டும் என்கிற உத்வேகத்துடன் செயலாற்றுங்கள். தன்னம்பிக்கையுடன் உழைப்போம். வெற்றியை நம் வசமாக்குவோம் என்று கூறினார்.




நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய விற்பனை அதிகாரிகள், கள அதிகாரிகளுக்கு பரிசுகள், சுழல் கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் பிராண்டிங் பிரிவின் பிரதீப் நன்றி கூறினார். 





சத்யம் பயோ வின் டிஜிட்டல் பிராண்டிங் பிரிவின் சார்பாக  புதிய இணைய தளம் சேனல் , முகநூல் மற்றும் இயங்கு தளம் தொடங்கப்பட்டது . 


இதனை சத்யம் பயோ ஊழியர்கள் திறந்து வைத்தனர் . உரிமையாளர் திரு .செந்தில் குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் .

Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!