Sathyam Bio farmers meet in mannadi mangalam








       

     ரசாயனம் இல்லாத, சத்தான உணவுப்பொருட்களை விளைவிக்க


இயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு 
அனைத்து விவசாயிகளும் மாறவேண்டும்!
            
            சத்யம் பயோ நிறுவன விவசாயிகள் சந்திப்பில் வலியுறுத்தல்!!

மதுரை, ஆக.21
ரசாயனம் கலக்காத, சத்தான உணவுப்பொருட்களை விளைவிக்க அனைத்து விவசாயிகளும் இயற்கை உரங்களின் பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்று சத்யம் பயோ இயற்கை உரத்தயாரிப்பு நிறுவனம் நடத்திய விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்து¬றையை அடுத்த மண்ணாடிமங்கலம் நரசிங்கப்பெருமாள் கோயில் வளாகத்தில், கர்னர் ஜான்பென்னி குயிக் விவசாயிகள் நற்பணி மன்றமும், கடல்பாசியிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பதில் முன்னணி     நிறுவனமான மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரமும் இணைந்து விவசாயிகள் சந்திப்பு மற்றும் இயற்கை விவசாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் மதுரை மாவட்டவிவசாய (கொடிக்கால்) சங்கத்தலைவர் பொன்.ஜெயராம்  தலைமை வகித்தார். விவசாய சங்க செயலாளர் சோணைமுத்து, பொருளாளர் பால்காரர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்யம் பயோ இயற்கை உர நிறுவனத்தின் ஏரியா மேலாளர் அருண்ரத்னம், விற்பனை அதிகாரி சாரதி, களப்பணியாளர்கள் கிருஷ்ணன்நல்லு, சூர்யப்பிரகாஷ், சத்யம்பயோ மக்கள் தொடர்பு அலுவலர் தியாகராஜன் ஆகியோர் இயற்கை விவசாயம் தொடர்பான தொழில்நுட்ப வழிமுறைகள், இயற்கை உரங்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர்.
தங்கள் பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படும் பயிர்களான நெல், தென்னை, வெற்றிலை ஆகியவற்றுக்கு இயற்கை உரங்கள் பயன்பாடு குறித்த சந்தேகங்களுக்கு விவசாயிகள் விளக்கம் பெற்றனர். இரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்தியதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர் சத்துக்கள் அழிந்து போனதுடன், மண்ணின் தன்மையும் மாறி, இறுகிப்போய் இருப்பதை மாற்ற தற்போது பயன்பாட்டில் உள்ள இரசாயன உரங்களை பாதியாக குறைத்துக்கொண்டு, அதனுடன் 24 மாதம் முதல் 36 மாதங்களுக்கு இயற்கை உரங்களை சம அளவில் பயன்படுத்தி வந்தால் மண் பழையநிலைக்கு திரும்புவதுடன், நுண்ணுயிர் சத்துக்களும் பெருகும். பின்னர் முழுமையாக இயற்கை விவசாயத்துக்கு மாறிக்கொள்ளலாம். இதனால் மண் வளமும் காப்பாற்றப்படுவதுடன், சத்தான, தரமான, ரசாயனம் கலக்காத உணவுப்பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்று எடுத்துரைக்கப்பட்டது. எதிர்கால தலைமுறையின் நலனை கருதி¢அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கும், இயற்கை உர பயன்பாட்டுக்கும் முழு அளவில் மாற வேண்டும் என்று விவசாய சங்கத்தலைவர் பொன்,ஜெயராம் வலியுறுத்தினார்.
தங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டனர். விழா முடிவில் சத்யம் பயோ நிறுவனர் வி.செந்தில்குமார் சார்பாக அனைத்து விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


நன்றி : தின தந்தி 



Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!