இயற்கைப் பாதைக்குத் திரும்பும் ஆந்திரம்! ஆ ந்திர முதல்வர் “2024 இல் தமது மாநிலம் முழுமையான இயற்கை மாநிலமாகி விடும். இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஒழிக்கப்பட்டு விடும்'' என, தாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் அறிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த, விவசாய இடுபொருள்களின் செலவைக் குறைத்தல், உணவு நஞ்சாதலைத் தடுத்தல், மண்வளம் கூட்டல் போன்றவற்றை 2015 லேயே தொடங்கி, நஞ்சற்ற விவசாயத்தின் முன்னோடியானது ஆந்திரம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பு, இந்த ஆண்டில் மண்டலத்துக்கு ஒரு பஞ்சாயத்து என, ஐந்து இலட்சம் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர் என்றும், 2024 இல் திட்டம் முழுமை பெறும் என்றும் கூறுகிறது. “16,500 கோடி ரூபாய் இதற்கான மூலாதாரமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி அனைத்து நில உடைமையாளர்கள், விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும்'' என்கிறார், இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.விஜயகுமார். விவசாயத் துறையினர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவுவதே கடமை. உருவாக்கப்படும் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள் திட்டத்தை முன் நட...
Posts
Showing posts from February, 2020
- Get link
- X
- Other Apps
மண் வளத்தை காக்க சணப்பை சாகுபடி: துறை வல்லுநர்கள் ஆலோசனை வேளாண் நிலங்களில் மண் வளத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த சணப்பை சாகுபடி செய்யலாம் என, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் செயல்படும், இந்திய வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது பற்றி தெரிவித்துள்ளனர். சணப்பை சாகுபடி இந்தியா சணப்பை உற்பத்தியில், உலகளவில் முதலிடத்தில் இருந்து வருகிறது. அனைத்து வகை மண்ணிலும் நன்கு வளரக்கூடிய, குறிப்பாக களர் மற்றும் உவர் மண்ணிலும் செழித்து வளரக் கூடியது இந்த சணப்பை. வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடிய பயறு வகை தாவரம். பொதுவாக விவசாயிகள் மண்ணை வளப்படுத்துவதற்காக பயிர் சாகுபடிக்கு முன் சணப்பு விதைக்கும் பழக்கம் இருக்கிறது. சணப்பை காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் மூலம் சேமிக்கும் தன்மை கொண்டது என்பதால் விதைத்த 45 நாள்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கி...
தேனி மாவட்டம் அய்யம்பட்டியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா! மதுரை சத்யம் தொழில்குழுமம் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு!!
- Get link
- X
- Other Apps
தேனி, பிப்.17 - தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம், அய்யம்பட்டியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஏழை காத்தம்மன், ஸ்ரீவல்லடிகார சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு பிரமாண்ட ஜல்லிக்கட்டு திருவிழா கோலாகலமாக நடந்தது. விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், காளையர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தேனிமாவட்ட கலெக்டர் திருமதி பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மதுரை சத்யம் தொழில்குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு வாடிவாசல் பகுதியில் அய்யம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி தனலட்சும் அண்ணாதுரை, அய்யம்பட்டி கிராம கமிட்டி தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் சிறப்பு மரியாதை அளித்தனர். வாடிவாசலில் இருந்து துள்ளிக்...
வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!
- Get link
- X
- Other Apps
வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்! மதுரை, பிப்.12 - மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள புனித சார்லஸ் உயர்நிலைப்பள்ளியில் ஷோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில் வாடிப்பட்டி வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளிகளைச்சேர்ந்த மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில கராத்தே சங்க துணைத்தலைவர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட கராத்தே சங்க துணைத்தலைவர் ஜெ.காளிதாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சத்யம் தொழில்குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார், வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளையும், கராத்தே பள்ளி சார்பில் சான்றிதழ்களையும் வழங்கி சத்யம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தற்காப்புக்கலை என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே படிக்கும் கால...
கந்தர்வக்கோட்டை பெருங்குளத்தில் F3 ஆர்கானிக் மார்க்கெட் புதிய பிரான்சைஸி! சக்தி இயற்கை உரங்களுக்கு விவசாயிகள் அமோக வரவேற்பு!!
- Get link
- X
- Other Apps
கந்தர்வக்கோட்டை பெருங்குளத்தில் F 3 ஆர்கானிக் மார்க்கெட் புதிய பிரான்சைஸி! சக்தி இயற்கை உரங்களுக்கு விவசாயிகள் அமோக வரவேற்பு!! தஞ்சை, பிப்.06 - கந்தர்வக்கோட்டை பெருங்குளத்தில் இயற்கை உரங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மதுரை சத்யம் பயோவின் F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்புவிழா கோலாகலமாக நடந்தது. உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில் F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்பு விழாவின் மங்களகரமான நிகழ்வும் நடந்தேறியதால் விவசாயிகள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். விழாவில் கந்தர்வக்கோட்டை ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸியின் அதிபரான தமிழன் ஆர்கானிக் சின்னத்தம்பி அனைவரையும் வரவேற்றார். இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனமான மதுரை சத்யம் பயோவின் இயற்கை உரங்களின் சிறப்புகளையும், F 3 ஆர்கானிக் மார்க்கெட்டின் சி...
துல்லியப் பண்ணையில் உயிரி தொழில் நுட்பம்!
- Get link
- X
- Other Apps
துல்லியப் பண்ணையில் உயிரி தொழில் நுட்பம்! உ லகத்தில் வாழும் ஆறு மில்லியன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆசியாவில் உள்ளனர். வளரும் நாடுகளில் சூழ்நிலைத் தாக்கம் மற்றும் நிலையற்ற அரசியல் தன்மையால் பெரும்பாலான மக்கள் உணவுப் பாதுகாப்பை அடைய முடியவில்லை. ஆனால், அதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை முதுகெலும்பாகக் கொண்டுள்ளது. இதில், உயிரி தொழில் நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். சாகுபடியின் பல்வேறு நிலைகளான விதைத்தல், உரமிடல், பதப்படுத்துதல், சிப்பம் கட்டுதல், போக்குவரத்துப் போன்றவற்றில் உயிரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பயனடைய முடியும். மூலக்கூறு அடிப்படையில் நோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல், பயிர்களில் ஊட்டச்சத்தைக் கிரகிக்கும் தன்மையைக் கூட்டுதல் போன்றவற்றில் உயிரி தொழில் நுட்பத்தைப் புதிய கருவியாகப் பயன்படுத்தலாம். துல்லியப் பண்ணையம் என்பது, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான அளவுகளில் வழங்குவதாகும். பயிர் வளரும் சூழ்நிலையைக் க...