இயற்கைப் பாதைக்குத் திரும்பும் ஆந்திரம்!
ஆந்திர
முதல்வர் “2024 இல் தமது மாநிலம் முழுமையான இயற்கை மாநிலமாகி
விடும். இரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு ஒழிக்கப்பட்டு விடும்'' என,
தாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்வை
மேம்படுத்த, விவசாய இடுபொருள்களின் செலவைக் குறைத்தல், உணவு நஞ்சாதலைத் தடுத்தல்,
மண்வளம் கூட்டல் போன்றவற்றை 2015 லேயே தொடங்கி, நஞ்சற்ற விவசாயத்தின்
முன்னோடியானது ஆந்திரம். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பு, இந்த ஆண்டில்
மண்டலத்துக்கு ஒரு பஞ்சாயத்து என, ஐந்து இலட்சம் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுவர்
என்றும், 2024 இல் திட்டம் முழுமை பெறும் என்றும் கூறுகிறது.
“16,500 கோடி ரூபாய் இதற்கான
மூலாதாரமாக உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி அனைத்து நில உடைமையாளர்கள்,
விவசாயத் தொழிலாளர்களுக்குத் தரப்படும்'' என்கிறார், இத்திட்ட ஒருங்கிணைப்பாளர்
டி.விஜயகுமார். விவசாயத் துறையினர், விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்து
அவர்களுக்கு உதவுவதே கடமை. உருவாக்கப்படும் விவசாய உற்பத்தியாளர் சங்கங்கள்
திட்டத்தை முன் நடத்தும். இதற்கு, மத்திய அரசின் வேளாண் துறையும், தனியார்
நிறுவனங்களும் உதவும்.
இயற்கை வேளாண்மை செலவு குறைவாகவும், கூடுதல் விளைச்சலைத் தருவதாகவும்
நிரூபிக்கப்பட்டது. பருத்தி உற்பத்தி 11%, இராகி உற்பத்தி 40% கூடுதலாயின. இடுபொருள்
செலவு இல்லை. இரசாயனம், பூச்சிக்கொல்லி, சிறப்பு விதைச் செலவு எதுவும் இல்லை. மேலும்,
வறட்சி, வெள்ளம் ஆகிய பேரழிவுகளைத் தாங்கும் திறனும் பெற்றது. பல்லினப் பயிர் வளர்ப்பு,
வரப்பு விதைப்பு ஆகியன மண்வள இழப்பைத் தடுத்து வளம் கூட்டின. நீர் ஆவியாவதை மூடாக்கு
மூலம் தடுத்து, நீர்த்தேவை, மின் பயன்பாடு குறைக்கப்பட்டன. உணவு நஞ்சில்லாமல் சத்து
மிக்கதாக விளைந்தது.
2016 இல் சிக்கிம் இந்தியாவின் முதல் இயற்கை வேளாண்மை மாநிலமானது. இந்த
வேளாண்மைக்கான இயற்கை உரம், பசுந்தாள் உரம், மண்புழு உரம் போன்றவற்றின் தேவையால், முதலில்
சாகுபடிச் செலவும் குறைந்தது.
உலகம் புதிய சிந்தனை திருப்பு முனையில் நிற்கிறது. அறிவியல் தொழில்
நுட்பங்கள் யாருடைய நலனுக்காக, அவை நமது ஒரே வீடான பூமியைக் காக்கத் துணை செய்யுமா
என்னும் கேள்விகள் முன் நிற்கின்றன. நம்பிக்கையூட்டும் புதிய பாதையில், மக்களின் நீடித்த
நலனுக்காக நடைபோடத் தொடங்கியுள்ளது ஆந்திரம்.
மேலும் இயற்கை விவசாயம் பற்றி தெரிந்து
கொள்ள
அழையுங்கள் : 75508 75508
Comments
Post a Comment