துல்லியப் பண்ணையில் உயிரி தொழில் நுட்பம்!



துல்லியப் பண்ணையில் உயிரி தொழில் நுட்பம்!


லகத்தில் வாழும் ஆறு மில்லியன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோர் ஆசியாவில் உள்ளனர். வளரும் நாடுகளில் சூழ்நிலைத் தாக்கம் மற்றும் நிலையற்ற அரசியல் தன்மையால் பெரும்பாலான மக்கள் உணவுப் பாதுகாப்பை அடைய முடியவில்லை. ஆனால், அதை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.  இந்தியப் பொருளாதாரம் வேளாண்மையை முதுகெலும்பாகக் கொண்டுள்ளது.  இதில், உயிரி தொழில் நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்துவதுடன், உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். சாகுபடியின் பல்வேறு நிலைகளான விதைத்தல், உரமிடல், பதப்படுத்துதல், சிப்பம் கட்டுதல், போக்குவரத்துப் போன்றவற்றில் உயிரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திப் பயனடைய முடியும்.

மூலக்கூறு அடிப்படையில் நோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்துதல், பயிர்களில் ஊட்டச்சத்தைக் கிரகிக்கும் தன்மையைக் கூட்டுதல் போன்றவற்றில் உயிரி தொழில் நுட்பத்தைப் புதிய கருவியாகப் பயன்படுத்தலாம்.

துல்லியப் பண்ணையம் என்பது, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான அளவுகளில் வழங்குவதாகும்.  பயிர் வளரும் சூழ்நிலையைக் கண்காணிக்க, இதில், கணினி, செயற்கைக்கோள் புவியியல் இட மாதிரிகள் மற்றும் தொலையுணர் கருவிகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பண்ணையத்தில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, தொலையுணர் கருவிகளின் துல்லியத்தை மேலும் கூட்ட முடியும். உயிரி உணர் கருவிகளை நிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தி, பயிர்களின் வளர்ச்சி மற்றும் மண்ணின் தன்மையைக் கவனித்து, தேவையான பயிர் வளர் சூழலை உருவாக்க முடியும்.

உயிரி உணர் கருவிகள் பயிரின் உயிரியல் மற்றும் வேதியியல் தன்மையில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் தெரிவிக்கும். இதனால், பயிர்களில் ஏற்படும் நோய் மற்றும் பூச்சித் தாக்கத்தை உடனே அறிந்து கட்டுப்படுத்த முடியும். உயிரி உணர் கருவிகளில் உள்ள உயிரித் துகள்கள் செடிகளில் ஏற்படும் உயிரியல் மாற்றத்துக்கு ஏற்ப உந்தப்படும். எனவே, அந்த மாற்றங்களை உடனுக்குடன் உயிரி உணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினியில் காண முடியும்.

உயிரி பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், பயிர்க்காப்பு எளிதாவதுடன், தேவையற்ற நச்சுப் பொருள்கள் சுற்றுச்சூழலில் கலப்பதும் தவிர்க்கப்படும். உயிரி தொழில் நுட்ப முறையில் தயாரிக்கப்படும் வடிப்பான்கள் நீரிலுள்ள நோய்க் கிருமிகளை எளிதில் வடிகட்டி நீக்கி விடும். மேலும், இந்த வடிகட்டிகள் குடிநீர் மற்றும் பாசன நீரிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கப் பெருமளவில் பயன்படுகின்றன. இதன் மூலம், நீர் நிலைகளிலும் விளைநிலங்களிலும் தேவையற்ற பாசிகள் வளர்வதைத் தடுக்க இயலும்.

உயிரி தொழில் நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் துல்லிய இரும்பு உயிரி துகள்கள் மாசடைந்த நீர் நிலைகள் மற்றும் மண்ணைத் தூய்மை செய்யும். உயிரி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இடுபொருள்கள் வீணாவது பெருமளவில் தடுக்கப்படுகிறது. இந்த நுட்பத்தின் உதவியால் தயாரிக்கப்படும் சிப்பப் பொருள்கள், அறுவடைக்குப் பிறகு விளைபொருள்களை நெடுநாட்கள் பாதுகாக்க உதவுகின்றன. மரபுசாரா எரிபொருள்களை உயிரி தொழில் நுட்பத்தின் உதவியுடன் உருவாக்க முடியும். இதனால் சுற்றுச்சூழல் மாசைப் பெருமளவில் தடுக்க இயலும்.


மேலும் இயற்கை விவசாய  ஆலோசனைக்கு  அழையுங்கள்  

75508 75508



Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!