வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!


வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி
சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!


மதுரை, பிப்.12-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள புனித சார்லஸ் உயர்நிலைப்பள்ளியில் ஷோபுகாய் கோஜுரியோ கராத்தே பள்ளி சார்பில் வாடிப்பட்டி வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளிகளைச்சேர்ந்த மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில கராத்தே சங்க துணைத்தலைவர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட கராத்தே சங்க துணைத்தலைவர் ஜெ.காளிதாஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சத்யம் தொழில்குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமார், வாடிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளையும், கராத்தே பள்ளி சார்பில் சான்றிதழ்களையும் வழங்கி சத்யம் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வி.செந்தில்குமார் பேசும்போது, இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு தற்காப்புக்கலை என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே படிக்கும் காலத்திலேயே மாணவிகள் அனைவரும் கராத்தே போன்ற தற்காப்புக்கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.



இக்கலையை தற்காப்புக்காக மட்டும் கற்றுக்கொள்ளாமல், நாட்டுக்காகவும் கற்று சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைப் பெற்று நம் தாய்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். இப்போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு பரிசுகளை குவிக்க வாழ்த்துகிறேன் என்றார். பெண்களின்  தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டிக்கு ஏற்பாடு செய்த காளிதாசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.



போட்டிகளில் பங்கேற்ற மாணவிகள் கராத்தே பயிற்சியில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.

Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்