கந்தர்வக்கோட்டை பெருங்குளத்தில் F3 ஆர்கானிக் மார்க்கெட் புதிய பிரான்சைஸி! சக்தி இயற்கை உரங்களுக்கு விவசாயிகள் அமோக வரவேற்பு!!


கந்தர்வக்கோட்டை பெருங்குளத்தில்
F3 ஆர்கானிக்  மார்க்கெட் புதிய பிரான்சைஸி!
சக்தி இயற்கை உரங்களுக்கு விவசாயிகள் அமோக வரவேற்பு!!


தஞ்சை, பிப்.06-
கந்தர்வக்கோட்டை பெருங்குளத்தில் இயற்கை உரங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மதுரை சத்யம் பயோவின்   F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்புவிழா கோலாகலமாக நடந்தது.

உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நாளில்  F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸி திறப்பு விழாவின் மங்களகரமான நிகழ்வும் நடந்தேறியதால் விவசாயிகள் பெரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.


விழாவில் கந்தர்வக்கோட்டை ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் சக்திவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கிளையை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் புதிய பிரான்சைஸியின் அதிபரான தமிழன் ஆர்கானிக் சின்னத்தம்பி அனைவரையும் வரவேற்றார்.


இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனமான மதுரை சத்யம் பயோவின் இயற்கை உரங்களின் சிறப்புகளையும்,  F3 ஆர்கானிக் மார்க்கெட்டின் சிறப்பம்சங்களையும் பொது மேலாளர் ஞானசேகரன், மூத்த வணிகத்தலைவர் அழகப்பன், ஏரியா சேல்ஸ் மேனேஜர் வேல்முருகன், செய்தித்தொடர்பாளர் தியாகராஜன் ஆகியோர் விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர்.

சிறப்பு விருந்தினரான முன்னாள் ஊராட்சித்தலைவர் சக்திவேல் பேசும்போது, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் தஞ்சை மண்ணில், இயற்கை உரங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் மதுரை சத்யம் பயோவின் புதிய கிளை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முற்காலத்தில் நம் முன்னோர்கள் இயற்கை விவசாயத்தையே முழுமையாக பயன்படுத்தி வந்தனர். அதனால் எந்தவித இராசயனக் கலப்பும் இல்லாத உணவுப்பொருட்கள் கிடைத்தன. இதை சாப்பிட்டு வாழ்ந்த நம் தாத்தா, பாட்டிகள் 75 வயது ஆனாலும் எந்த வித நோய், நொடியும் இல்லாமல் கடைசி வரை ஆரோக்கியமாக வாழ்ந்தனர். மழைக்கு கூட அவர்கள் ஆஸ்பத்திரி பக்கம் அண்டியதில்லை. சின்ன, சின்ன தொல்லைகள் வந்தாலும் அதையும் நாட்டு வைத்தியம், கை வைத்தியத்தாலேயே சரி செய்து கொண்டனர். எந்தவித மருத்துவச்செலவும் இல்லாமல் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு எந்த வித இராசயனக் கலப்பும் இல்லாத ஆரோக்கியமான உணவுகளே காரணம். ஆனால் இன்றைக்கு  இராசயன உரங்களை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை சாப்பிடும் இன்றைய தலைமுறையினர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். பிறந்த குழந்தை கூட கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இந்த நிலை முற்றிலுமாக மாற வேண்டும் என்றால் தஞ்சை மண்ணின் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு முழுமையாக மாற வேண்டும். இரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை உரங்களையே முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்றார்.


விழாவில் கலந்து கொண்ட விவசாயிகள் நெல், தென்னை, பருத்தி சாகுபடி தொடர்பான தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். சக்தி இயற்கை உரங்களின் சிறப்புகளையும், அதை பயன்படுத்தும் விதத்தையும் ஆர்வத்துடன் கேட்டதுடன், பலர் தங்கள் நிலங்களுக்கு சத்யம் பயோவின் களப்பணியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து இயற்கை உரங்களை பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Comments

  1. சோழ நாட்டின் பெருவுடையார் ஆலய குடமுழுக்கு விழா அன்று தமிழன் ஆர்கானிக் பிரான்சியஸ் உதயமாகி இருக்கிறது.மேலும் தஞ்சாவூர் பெரிய கோயிலை ராஜராஜ சோழன் கட்டிய கட்டட கலை யுனஸ்கோவால் பாராம்பரிய சின்னமாக அறிவித்ததை போல் நெல் விலையும் பூமியில் கருங்கல் மூலம்.அதாவது விஞ்ஞான வளராத காலத்தில் 216 அடி உயரத்தில் கோயில் கட்டி தஞ்சை க்கு சிறப்பு சேர்த்ததை போல்,நெற்களஞ்சியமாம. தஞ்சைக்கு சத்தியம் இயற்கை உரம் தயாரிப்புகள் விவசாயிகள் பயன்படுத்த வாழ்த்துகிறேன்,மேலும் இலக்காக குடமுழுக்கு விழால் 9 லஞ்சம் பேர் கலந்துகொண்டதை போல் தஞ்சை யில். 10 லஞ்சம் விவசாயி வாழ்வில் சத்தியம் F3 சென்றடைய விரும்பும். தஞ்சாவூர் மா.கோபுராஜ.7200426374

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!