வயல்பட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி பகுதிகளில் சக்தி இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி! ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!!


வயல்பட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி பகுதிகளில்சக்தி இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி!ஏராளமான விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!!


தேனி, டிச.07-
தேனி சுற்று வட்டார பகுதிகளில் மதுரை சத்யம் பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரத்தின் சார்பாக இயற்கை உரம் குறித்த விழிப்புணர்வுக்கான  விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வயல்பட்டி, பூதிப்புரம், கோடங்கிபட்டி  ஆகிய கிராமங்களில் இருநாட்களாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சத்யம் பயோ நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர் தியாகராஜன் மற்றும் கள அலுவலர்கள், விற்பனை அலுவலர்கள் கலந்து கொண்டு சக்தி இயற்கை உரம் பயன்படுத்துவதின் அவசியம், அதனால் ஏற்படும் நன்மைகள், குறைந்த முதலீட்டில் இருமடங்கு மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறினர். இந்நிகழ்ச்சிகளில் அந்தந்தப் பகுதி விவசாயிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார விவசாயிகளும் ஆர்வத்துடன் பெருமளவில் கலந்து கொண்டு பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சக்தி இயற்கை உரத்தின் ஸ்டாலையும் பார்வையிட்டு, உரங்களை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

இந்தப்பகுதிகளில் மக்காச்சோளம், வாழை, கரும்பு போன்ற பருவகால பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் தென்னை போன்ற நீண்ட காலப்பயிர்களும், நெல் போன்றவையும் பயிரிடப்பட்டுள்ளன. இப்பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்கள், இயற்கை அடி உரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை விவசாயிகள் ஆர்வமுடன் கேட்டதுடன், இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் இன்றைய சந்ததியினருக்கு மட்டுமின்றி, எதிர்கால சந்ததியினருக்கும் கிடைக்க கூடிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு பெற்றுச்சென்றனர்.
இதுவரை இரசாயன உரங்களையே பயன்படுத்தி வந்த ஏராளமான விவசாயிகளும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம், இனி தாங்களும் இயற்கை உரங்களுக்கு மாறுவோம் என்பதை உறுதியாகவே ஏற்றுக்கொண்டனர்.

சர்வதேச மண்தினம் கொண்டாடப்படுகின்ற வேளையில், கிராமப்புற விவசாயிகளிடையே மண்ணின் மகத்துவத்தையும், இயற்கை உரம் பயன்படுத்துவதன் அவசியத்தையும் விழிப்புணர்வாக கொண்டு செல்வதில் மதுரை சத்யம் பயோ நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.

Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!