விவசாயம் படித்த நம்மூர் பெண்ணுக்கு ரூ. 1 கோடி சம்பளத்தில் வேலை! அமெரிக்க நிறுவனம் அள்ளிச்சென்றது!!

விவசாயம் படித்த நம்மூர் பெண்ணுக்கு
ரூ. 1 கோடி சம்பளத்தில் வேலை!

குர்தாஸ்பூர், டிச.07-
ஒரு கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை இந்திய பெண்ணுக்கு கிடைத்துள்ளது. வேலை கனடாவில். வேளாண்மையில் முதுகலை இறுதி ஆண்டுப் படிப்பை முடிக்கப் போகும் கவிதா ஃபமனுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

 பயிர்களுக்கு உகந்த பூச்சி கொல்லிகளைத் தயாரிப்பதில் 118 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் முன்னணி நிறுவனமான மான்சான்ட்டோவின் கனடா நிறுவனத்தில் பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிப்பு மேலாளராக கவிதா ஃபமன் கடந்த மாதம் பொறுப்பேற்றுள்ளார்.

 கவிதாவின் கல்வித் தகுதி, அறிவுத் திறன் அடிப்படையில் பல சுற்று வடிகட்டலுக்குப் பிறகே தேர்வு பெற்றுள்ளார். "வேளாண் படிப்பில் ஆராய்ச்சி முனைப்பிருந்தால் கணினி துறையில் அதிக சம்பளம் கிடைப்பது போல் வேளாண்மை துறையிலும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்'' என்கிறார் கவிதா ஃபமன்.

 பஞ்சாப் குர்தாஸ்பூரில் இருக்கும் லவ்லி வேளாண் பல்கலைக் கழகத்தில் கவிதா ஃபமன் முதுகலை படிப்பு படித்து வந்தார்.




Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!