F3 ஆர்கானிக் மார்க்கெட்டில் இணைய வழிகாட்டுகிறார் உசிலம்பட்டி பிரான்சஸி இளையராஜா
போட்ட காசை எடுக்கிறதுக்கு அருமையான தொழில்...
F3 ஆர்கானிக் மார்க்கெட்டில் இணைய வழிகாட்டுகிறார்
உசிலம்பட்டி பிரான்சஸி இளையராஜா வீரணத்தேவர்!
மதுரை, அக்.01-
போட்ட காசை எடுக்கிறதுக்கு அருமையான தொழில். அனைவரும் இத்தொழிலில் இணைய வேண்டும்
என்கிறார் உசிலம்பட்டி F3ஆர்கானிக்
மார்க்கெட்டின் பிரான்சிஸியான திரு.இளையராஜா வீரணத்தேவர் அவர்கள்.
சத்யம் பயோ நிறுவனத்தின் தயாரிப்புகளான சக்தி இயற்கை உரங்கள், இயற்கை கால்நடை தீவனங்கள்,
இயற்கை உணவுகள், இம்மூன்றையும் ஒரே குடையின் கீழ் விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கவேண்டும்
என்ற உன்னத நோக்கத்துடன் சத்யம் பயோ நிறுவனத்தின் நிறுவனர் திரு.செந்தில்குமார் அவர்களால்
உருவாக்கப்பட்டதே F3 ஆர்கானிக்
மார்க்கெட்.
F3 ஆர்கானிக் மார்க்கெட்
என்பது விவசாய பெருமக்களுக்கு இயற்கை இடுபொருட்களை நேரடியாக விற்பனை செய்து கொள்வதோடு நின்று
விடாமல், வேளாண் நிபுணர்களின் தகுந்த ஆலோசனைகளுடன், விவசாய நிலங்களுக்கே நேரடியாக சென்று
கள ஆய்வு மேற்கொள்தல், பயிர்களுக்கு ஏற்ற உரங்களை பரிந்துரைத்தல், அதிக மகசூல் பெறுவதற்கான
வழிகாட்டுதல்கள் என அவர்களின் தொடர் பணிகளிலும் சத்யம் பயோ தன்னை ஈடுபடுத்திக்
கொள்கிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் F3 மார்க்கெட்டின்
பிரான்சஸியான திரு.இளையராஜா வீரணத்தேவர் அவர்கள், சத்யம் பயோ நிறுவனத்திற்கு நேரில்
வருகை தந்து, தமக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நிறுவனர் திரு.வி.செந்தில்குமார்
அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
திரு.இளையராஜா வீரணத்தேவர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு வழங்கிய
திரு.வி.செந்தில்குமார் அவர்கள், உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி அனைத்து
விவசாய பெருமக்களும் பயன்பெறும் வகையில் சத்யம் பயோ நிறுவனத்தின் தயாரிப்புகளை கொண்டு
செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இச்சந்திப்பின்
போது சத்யம் பயோ நிறுவனத்தின் வணிகத்தலைவர்களில் ஒருவரான திரு. சக்திவேல் அவர்கள் உடன்
இருந்தார்.
இச்சந்திப்பு குறித்து திரு.இளையராஜா வீரணத்தேவர் அவர்கள் கூறியதாவது-
உசிலம்பட்டி தக்கார் ஆர்கானிக்கிலிருந்து சத்யம் பயோவினன் F3 ஆர்கானிக் மார்க்கெட்
பிரான்சஸி எடுத்திருக்கேன். சத்யம்பயோ நிறுவனரை சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
அருமையான மனிதர். போட்ட காசை எடுக்கிறதுக்கு இது அருமையான தொழிலும் கூட. விவசாயத்துக்கு
ஏற்ற அனைத்து விதமான உரங்களும் இருக்கு. இயற்கை உரத்துல இது சூப்பரா இருக்கு. என்னை
மாதிரி இன்னும் நிறைய பேர் ஏஜென்ஸி எடுத்து லட்சக்கணக்கா சம்பாதிச்சு நல்ல படியா பொழைங்க.
வாழ்க, வளமுடன் என்கிறார் பெருமிதத்துடன்.
F3 ஆர்கானிக் மார்க்கெட்
தொடர்புக்கு... 75508 75508.
Well appreciated ..
ReplyDelete