சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி அமோக விளைச்சலை அள்ளி குவிக்க ஆர்வம்!!


வருணபகவான் கருணையால்
மதுரை மாவட்டம் குலமங்கலத்தில்
நடவுப்பணியை துவங்கிய விவசாயிகள்!

சக்தி இயற்கை உரங்களை பயன்படுத்தி
அமோக விளைச்சலை அள்ளி குவிக்க ஆர்வம்!!

மதுரை, அக்.02&
மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை ஆர்வமுடன் துவக்கி உள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளது. பரவலாக பெய்து வரும் பருவமழையால், ஏற்கனவே குடிமராமத்து மூலம் தூர்வாரப்பட்ட ஏரிகளிலும், குளங்களிலும் தண்ணீர் நிரம்பி உள்ளது. அணைகளிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள் வழக்கமான நடவுப்பணிகளை துவக்கி உள்ளனர்.



மதுரை மாவட்டம் குலமங்கலம் பகுதியில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர். இதற்காக அனைத்து நிலங்களையும் உழுது தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இப்பகுதியில் பெரும்பாலும் ஒரு போக பாசனம் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பகுதி விவசாயிகளிடையே மதுரை சத்யம்பயோ நிறுவனத்தின் சக்தி இயற்கை உரங்களின் பயன்பாடு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நெல் விவசாயத்துக்கு எந்த வகையான சக்தி இயற்கை உரங்களை, எந்த அளவில் பயன்படுத்தினால் அமோக விளைச்சலை பெறலாம் என்ற வழிமுறைகள் குறித்து சத்யம் பயோ நிறுவனம் சார்பில் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்கப்பட்டது. இதனை ஆர்வமாக விவசாயிகள் கேட்டறிந்தனர்.

இந்த ஆண்டு பருவமழை தொடர்ந்து சிறப்பான முறையில் கைகொடுக்கும் என எதிர்பார்ப்பில் உள்ள விவசாயிகள், வரும் தைப்பொங்கல் திருநாள் விவசாய பெருமக்களுக்கு உற்சாகமானதாக அமையும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இயற்கை விவசாய ஆலோசனைக்கு  1800 425 8055



Comments

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!