மலேசியாவில் பசுமை விருது பெற்ற பசுமை தமிழன்







மலேசியாவில் தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்த்த மதுரை தமிழன்! கடல்பாசி இயற்கை உரம் தயாரிப்பிற்காக உயரிய விருது!!மலேசியாவில் நடந்த தேசம் ஊடக சாதனையாளர் விருது 2018&2019 வழங்கும் விழாவில் மதுரை சத்யம் பயோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமாருக்கு சாதனையாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 மலேசியாவில் உள்ள தேசம் மீடியா நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் விழா சமீபத்தில் மலேசிய நாட்டில் உள்ள மகாசா பல்கலைகழகத்தில்    நடந்தது.
விழாவில், மலேசியாவின் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவக்குமார், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கங்கை சுப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக, கடற்பாசியிலிருந்து இயற்கை உரம் தயாரிப்பில் முன்னிலையில் விளங்கும் மதுரை சத்யம் பயோ குழுமத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான வி.செந்தில்குமாருக்கு சிறந்த சாதனையாளருக்கான விருதினை வழங்கி கௌரவித்தனர். 
40 வயது, துடிப்புமிக்க இளைஞரான வி.செந்தில்குமார், தனது 25வது வயதில், 2004&ம் ஆண்டில் மதுரையை தலைமையிடமாக கொண்டு சத்யம் பயோ இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார். சர்காஸம் என்னும் ஆழ்கடலிலிருந்து சேகரிக்கப்படும் கடல்பாசியிலிருந்து இயற்கை உரங்களை தயாரித்து, சக்தி இயற்கை உரம் என்ற பெயரில் அறிமுகம் செய்தார். மண்ணை கெடுக்காத, அதே சமயம் மகசூலை அள்ளித்தருகின்ற சக்தி இயற்கை உரங்களுக்கு விவசாயிகளிடம் கிடைத்த அமோக ஆதரவின் பலனாக, தற்போது தமிழகம் முழுவதும் கிளைபரப்பி உள்ள சத்யம் பயோ நிறுவனம் இந்தியா முழுவதும் விரவி, தற்போது வெளிநாடுகளிலும் சக்தி இயற்கை உரங்கள் புகழ் பரப்பி நிற்கிறது.
சத்யம் பயோ என்ற பெயரில் வி.செந்தில்குமார் விதைத்த விதை, இன்று சத்யம் குழுமமாக, ஆறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் கிளை பரப்பி பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. வெறும் உரம் தயாரிப்போடு நின்று விடாமல் இனி வருகின்ற காலம் முழுமைக்கும், அடுத்தடுத்து வருகின்ற தலைமுறைகளுக்கும் தனது முயற்சிகள் பலன் அளிக்க வேண்டும் என்பதற்காக, அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன், மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அருகில் ஆஸ்டின்பட்டி மெயின்ரோட்டில் வேளாண் அறிவியல் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் பயின்று தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு தனது நிறுவனத்திலேயே நல்ல சம்பளத்துடன் நூறுசதவீத வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறார்
இயற்கையை போற்றும் இந்த இளைஞரின் வித்தியாசமான தொழில் புரட்சியாக, விவசாயிகளுக்கு தேவையான இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள், இயற்கை உணவுகள் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் கிடைக்கப்பெறும் வகையில் F3 ஆர்கானிக் மார்க்கெட் என்ற புதிய கான்செப்டை உருவாக்கி உள்ளார். இதன் மூலம் தன்னை போன்று படித்த, இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களை தொழில் அதிபர்களாக்கும் வித்தியாசமான முயற்சியிலும் இறங்கி இருக்கிறார். வீட்டுக்கு வீடு விவசாயம் செய்வோம், விவசாயத்தை தொழிலாக்கி விவசாயிகளை தொழிலதிபராக்குவோம் என்ற தாரக மந்திரத்தோடு அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார் வி.செந்தில்குமார்.
இயற்கை உரம் தயாரிப்போடு¢நிறுத்திக்கொள்ளாமல், இந்தியாவின் முதுகெலும்பாகத் திகழும் விவசாய பெருமக்களிடையே இயற்கை உரம் பயன்படுத்துவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், விவசாயிகள் நலன் சார்ந்த பல சமூக நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். 
வளமான பாரதம், வலிமையான பாரதம் என்கிற பிரதமர் மோடியின் இலட்சிய பயணத்தில், இயற்கை உரம் கொண்டு விளை நிலங்களுக்கு உயிர்தருவோம், விவசாயத்தால் உயர்பெறுவோம், நம் பிஞ்சு குழந்தைகளுக்கு நஞ்சற்ற உணவளிப்போம், பசுமையான பாரதம் படைத்து வலிமையான சந்ததியை உருவாக்குவோம் என்ற இலட்சியத்தை முன்னெடுப்பதில் முதல் ஆளாக நிற்கிறார் வி.செந்தில்குமார்.
  விவசாய நிலங்களும், வேளாண் தொழிலும் நசிந்து வரும் இன்றைய சூழலில், வி.செந்தில்குமார் போன்ற இளைஞர்களின் விவசாயத்தை பாதுகாக்கின்ற முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

Comments

  1. சாதனைகள் தொடரட்டும்
    விருதுகள் குவியட்டும்...
    மதுரை தமிழன் பெருமை
    உம்மால் உலகெங்கும் பரவட்டும்...
    சிகரம் தொட இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்ற சக்தி இயற்கை உரங்கள், கால்நடை தீவனங்கள்!

இயற்கை விவசாயத்துக்கு உரம் சேர்ப்பவர்

வாடிப்பட்டியில் மாணவிகளுக்கிடையிலான கராத்தே போட்டி சத்யம் குழுமம் அதிபர் வி.செந்தில்குமார் பரிசு வழங்கினார்!